இராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை
31 May 2026, 10:00 pm

இராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை

இராஜபாளையம், மே 31- இராஜபாளையம் நகரில் செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் செயல் பட்டு வரும் அனைத்து மக ளிர் காவல்நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லா ததால் புகார் அளிக்க வரும் பெண்கள் மற்றும் பொதுமக் கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த காவல்நிலை யத்தில் காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர், தலைமை காவலர்கள் மற்றும் காவ லர்கள் பணியாற்றி வரு கின்றனர்.

சமீபத்தில் நடை பெற்ற சட்டமன்றத் தேர்த லைத் தொடர்ந்து, இங்கு பணியாற்றி வந்த சில அதி காரிகள் இடமாற்றம் செய் யப்பட்டு புதிய அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்நிலையில், காவல் நிலையத்திற்கு புகார் மனு அளிக்க வருபவர்களுக்கு காத்திருப்பதற்கான அறை வசதி இல்லாததால், அவர் கள் காவல்நிலையத்திற்கு வெளியே வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப் படுகிறது.

மேலும், குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதி களும் போதுமான அளவில் இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

புகார் மனு அளித்த பிறகு பல மணி நேரம் காத்திருக்க வேண்டியதுடன், சில நேரங் களில் “நாளை வாருங்கள்” என கூறி அனுப்பப்படுவதாக வும், மறுநாளும் அதே நிலை தொடர்வதாகவும் புகார் தெரிவிக்கப்படுகிறது.

மனுக் களின் மீது விரைந்து நட வடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதாகவும், குற்றச்சாட் டுக்கு உள்ளானவர்களை நேரில் சென்று அழைத்து விசாரிப்பதற்குப் பதிலாக தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கும் நடைமுறை பின்பற்றப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராஜபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் முனி யாண்டி கூறுகையில், “மக ளிர் காவல் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பெண் கள் புகார் அளிக்க வருகின்ற னர்.

அவர்களுக்கு அமர்வ தற்கான இருக்கை வசதி கூட இல்லை.

பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை யில், குடிநீர் மற்றும் கழிப் பறை வசதிகளும் இல்லா தது வேதனைக்குரியது.

புகார் மனுக்களை விரைந்து விசாரித்து தீர்வு காணும் நடைமுறையையும் காவல் துறை உறுதி செய்ய வேண் டும்” என்றார்.

மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் இராஜபாளையம் உட் கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நேரடி யாக தலையிட்டு காவல் நிலையத்தில் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, பொதுமக்களின் புகார்களுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கோரிக்கைகள் நிறை வேற்றப்படாவிட்டால், பொதுமக்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.