இராஜபாளையம் நகராட்சி குடிநீர் வழங்கும் 6வது மைல் நீர்தேக்கம் ஒரு அடியாக வற்றியது
20 Jul 2026, 10:12 pm
<p><strong>இராஜபாளையம் நகராட்சி குடிநீர் வழங்கும் 6வது மைல் நீர்தேக்கம் ஒரு அடியாக வற்றியது</strong></p><p>இராஜபாளையம், ஜூலை 20- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்கும் ஆறாவது மைல் நீர்தேக்கம் தற்போது தண்ணீரின்றி ஒரு அடியாக குறைந்து காணப்படுகிறது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இராஜபாளையம் நகருக்கு குடிநீர் வழங்குவதற்காக ஆறாவது மைல் நீர்தேக்கம் கட்டப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகி வரும் அய்யனார் கோவில் ஆற்றில் இருந்து குடிநீர் ஏற்றி இராஜபாளையம் நகரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு அனுப்பி முறையாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சமீபகாலமாக மேற்கு தொடர்ச்சி மலையில் மழை இல்லாத நிலையில் கடுமையான வெயில் காரணமாக ஆறு வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் தண்ணீர் வரத்து ஏதும் இல்லாததால் ஆறாவது மைல் நீர் தேக்கத்தில் ஒரு அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. இதன் காரணமாக இராஜபாளையம் நகராட்சி சார்பில் 11 நகராட்சி கிணறுகளில் தண்ணீர் எடுக்கப்பட்டு நகர் பகுதி மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வீடுகளுக்கு குடிக்க மட்டுமே தண்ணீரை சேமித்து வைக்கவும், தோட்டங்களுக்கு பாய்ச்சுவது, இதர நீர்நிலைகளில் சேமித்து வைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.</p>
