ராஜா ராம் மோகன் ராய் ஆங்கிலேய முகவராம்! பாஜக அமைச்சர் உளறல்
16 Nov 2025, 3:30 pm
<p><strong>ராஜா ராம் மோகன் ராய் ஆங்கிலேய முகவராம்! பாஜக அமைச்சர் உளறல்</strong></p>
<p>19ஆம் நூற்றாண்டின் சமூக சீர் திருத்தவாதியும், அறிஞருமான ராஜா ராம் மோகன் ராய் கால னித்துவ பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் முகவர்களில் ஒருவர் என்று பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநிலத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர் இந்தர் சிங் பர்மர் கூறியிருப்பது பெரும் சர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பிர்சா முண்டாவின் 150ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அகர் மால்வா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் மேலும் கூறுகையில், “சுதந்தரத்திற்கு முன்பு வங்காளத்திலும் அருகிலுள்ள பகுதிகளிலும் ஆங்கிலக் கல்வி மூலம் பழங்குடி மக்களின் நம்பிக்கையை மாற்ற ஒரு தீய முயற்சி நடந்து கொண்டி ருந்தது. ஆங்கிலேயர்கள் பல இந்தி யர்களை போலி சமூக சீர்திருத்தவாதி களாக மாற்றினர். அவர்களில் ராஜா ராம் மோகன் ராய் ஒரு பிரிட்டிஷ் முகவ ராக தொடர்ந்து பணியாற்றியவர். அப் போது மத மாற்ற முயற்சியை தடுத்தது பிர்சா முண்டா தான். அவர் தான் பழங்குடி சமூகத்தைக் காப்பாற்றினார்” என வர லாறு தெரியாமல் உளறியுள்ளார்.</p>
