புல்லட் பைக்கை தூக்கி போதைக்கு எதிராக விழிப்புணர்வு
2 Jan 2026, 3:33 pm
<p><strong>புல்லட் பைக்கை தூக்கி போதைக்கு எதிராக விழிப்புணர்வு</strong></p>
<p>நாகர்கோவில், ஜன.2- குமரி மாவட் டத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் புல்லட் பைக்கை தூக்கி நடந்து போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தினார். புத்தாண்டில் இளைஞர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகாமல் உடல் வலிமை, மன வலிமை பெற்று சமூகத்திற்கு சிறந்த வழிகாட்டியாக திகழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்தியாவிலேயே முதன் முறையாக பிறர் துணையில்லாமல் புல்லட் இருசக்கர வாகனத்தை தூக்கினார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. </p>
