சிதம்பரம் அருகே ஆரம்ப பள்ளியைச் சூழ்ந்த மழைநீர்
4 Dec 2025, 3:52 pm
<p><strong>சிதம்பரம் அருகே ஆரம்ப பள்ளியைச் சூழ்ந்த மழைநீர்</strong></p>
<p>சிதம்பரம், டிச.4- சிதம்பரம் அருகே ஆரம்பப் பள்ளியை 5 நாட்களாகச் சூழ்ந்துள்ள மழைநீரை அகற்றாததால், பள்ளிக்கு ஆசிரியர்கள் விடுமுறை அளித்துள்ளனர். சிதம்பரம் அருகே ஆண்டார்முள்ளிப் பள்ளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் அதே பகுதியில் உள்ள 80-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்த நிலையில், 'டிட்வா' புயல் காரண மாக, கடந்த ஒரு வார காலமாகப் பெய்த கனமழையால், ஆண்டார்முள்ளிப்பள்ளம் கிராமத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியை மழை நீர் சூழ்ந்தது. தொடர்ந்து 5 நாட்களாக மழைநீர் சூழ்ந்துள்ளதால், பள்ளிக்கு மாண வர்கள் வருவதில் சிரமம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஊராட்சி நிர்வாகம் பள்ளியைச் சுற்றி சூழ்ந்துள்ள மழை நீரை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஆரம்பப் பள்ளிக்கு ஆசிரியர்கள் தொடர்ந்து விடுமுறை அளித்துள்ளனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும், உடனடி யாகத் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், பள்ளியைச் சுற்றி மழைநீர் சூழாமல் இருக்க மண் அடித்து மேடாக மாற்ற வேண்டும் எனவும் மாண வர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தப் பள்ளி, தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் தொகுதி யான குறிஞ்சிப்பாடியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
