தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கடையால், அருமனை பேரூராட்சிகளில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம்

15 minutes before
கடையால், அருமனை பேரூராட்சிகளில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம்

கடையால், அருமனை பேரூராட்சிகளில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு

ஆலோசனைக் கூட்டம்

அருமனை, நவ.23 -கன்னியாகுமரி மாவட்டம் கடையால் மற்றும் அருமனை பேரூராட்சிகளில் மழைநீர் சேகரிப்பு மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அருமனையில் பேரூராட்சி செயல் அலுவலர் பரஞ்சோதி தலைமை வகித்தார்.

பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் ஊழியர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

கடையால் பேரூராட்சியில் நடந்த கூட்டத்திற்கு தலைவர் ஜுலியட் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் முன்னாள் பேரூராட்சித் தலைவர் எஸ்.ஆர்.சேகர், கவுன்சிலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டங்களில் வீடுகள், பொது இடங்கள் மற்றும் அரசு அலுவலகக் கட்டடங்களில் மழைநீரைச் சேகரிப்பதன் அவசியம் குறித்தும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை முறையாக அமைத்து நீரைச் சேமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்துவது குறித்தும்விவாதிக்கப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.