தொடர் மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழைநீர்
3 Dec 2025, 2:59 pm
<p><strong>தொடர் மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழைநீர்</strong></p>
<p>கடலூர், டிச.3- கடலூர் மாவட்டத்தில் செவ்வாயன்று நள்ளிரவில் இருந்து காலை வரை தொடர் கனமழை பெய்தது. கடலூர், நெல்லிக்குப்பம், ரெட்டிச்சாவடி, துறைமுகம், பாலூர், திருவந்திபுரம், கூத்தப்பாக்கம் கே.என். பேட்டை பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இந்த மழையால் பல்வேறு சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் தேங்கியது. சாலைகளில் தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகளும், மக்களும் அவதி அடைந்தனர். குறிப்பாக கடலூரில் இருந்து திருவந்திபுரம் செல்லும் சாலையில் கே. என்.பேட்டை பகுதியில் மழைநீர் சூழ்ந்து கொண்டதால் வாகன ஓட்டிகள் பெரு மளவு அவதி அடைந்தனர். கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பகுதி யில் தையல்நாயகி நகர், நாகம்மாள் நகர், அழகர் சிட்டி நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகளில் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்து இருப்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். உடனடியாக அதி காரிகள் மழை நீரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.</p>
