நெமிலிச்சேரியில் ரூ.2.31 கோடியில் மழைநீர் வடிகால் பணி
19 Jan 2026, 2:23 pm
<p><strong>நெமிலிச்சேரியில் ரூ.2.31 கோடியில் மழைநீர் வடிகால் பணி</strong></p>
<p>அம்பத்தூர், ஜன. 19- ஆவடி தொகுதிக்குட் பட்ட இரண்டு ஊராட்சிகளில் ரூ.2.31 கோடி மதிப்பீட்டில் வடிகால் அமைக்கும் பணிக்கு அமைச்சர் சா.மு.நாசர் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். ஆவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட நடுகுத்தகை, நெமிலிச்சேரி ஆகிய இரு ஊராட்சிகளில் பருவ மழைக்காலங்களில் தெருக்களில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மேற்கண்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்க கோரி சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசருக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்த னர். இது குறித்து அவர் துறை அதிகாரிகளின் கவ னத்துக்கு கொண்டு சென்ற தையடுத்து, நடுகுத்தகை கிராமத்தில் 8 தெருக்க ளுக்கு ரூ.1.86 கோடி மதிப் பீட்டிலும், நெமிலிச்சேரி கிராமத்தில் ஒரு தெருவில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டிலும் வடிகால் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து மேற்கண்ட பணிக்கு ஒப்பந்தம் விடப் பட்டு ஒப்பந்ததாரர்களுக்கு அண்மையில் பணியாணை வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஞாயிற்றுக் கிழமை மேற்கண்ட இரண்டு ஊராட்சிகளிலும் வடிகால் அமைக்கும் பணிக்கு அமைச்சர் நாசர் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். இதில் பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலு வலர் அமிழ்தமணன், திமுக ஒன்றியச்செயலர் டி.தேசிங்கு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
