முந்தய பக்கம்

மழைநீர் வடிகால் அமைக்கும் பணி துவக்கம்

10 Nov 2025, 2:46 pm
மழைநீர் வடிகால் அமைக்கும் பணி துவக்கம்
<p><strong>மழைநீர் வடிகால் அமைக்கும் பணி துவக்கம்</strong></p> <p>கோவை, நவ.10- உடையாம்பாளையத்தில் ரூ.35 லட் சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி திங்களன்று துவங்கி யது. கோவை மாநகராட்சியின் கிழக்கு, &nbsp;மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தி யம் ஆகிய ஐந்து மண்டலங்களுக்குட் பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின் றன. அந்தவகையில், திங்களன்று உடையாம்பாளையம் பிரதான சாலை, &nbsp;காந்தி நகர் மேற்குப் பகுதியில் மாநக ராட்சி பொது நிதியிலிருந்து ரூ.35 லட்சம் &nbsp;மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் கட்டும் பணி துவங்கியது. இந்நிகழ்விற்கு, மாமன்ற உறுப்பினர் வி.இராமமூர்த்தி முன்னிலை வகித்தார். கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் கணபதி ப.ராஜ் குமார் பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயர் &nbsp;ரா.வெற்றிசெல்வன், உதவி ஆணையர் &nbsp;மகேஷ் கனகராஜ், உதவி செயற்பொறி யாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram