முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

21 Nov 2025, 5:11 pm
சென்னை விரைவு செய்திகள்

அகவிலைப்படி உயர்வு

புதுச்சேரி, நவ. 21 - புதுச்சேரியில் ஆறாவது ஊதியக் குழு சம்பளம் பெறும் அரசு ஊழியர் களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்பட் டுள்ளது. ஜூலை 1, 2025 முதல் அகவிலைப்படி 252 சதவீதத்தில் இருந்து 257 சதவீதமாக உயர்த்தப்படு கிறது. இந்த உயர்வு ஓய்வூதி யம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் பொருந் தும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.6 கோடி கூடுதல் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை பொழிவு 7 சதவீதம் குறைவு

சென்னை, நவ. 21 - தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை இது வரை இயல்பை விட 7  சதவீதம் குறைவாக பெய்து ள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இயல்பாக 305.8 மில்லி மீட்டர் பெய்ய வேண்டிய நிலையில் 284.7 மில்லி மீட்டர் மட்டுமே பதிவாகி யுள்ளது. சென்னையில் 24 சதவீதம் குறைவாக உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் பகல் ஒரு  மணிக்குள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறி விக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram