தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இன்று மேற்கு மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

2 Dec 2025, 4:11 pm
இன்று மேற்கு மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை
<p><strong>இன்று மேற்கு மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை</strong></p> <p>சென்னை, டிச.2 - வங்கக்கடலில் உருவான டிட்வா புயல், &nbsp;காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவி ழந்து சென்னை கடற்கரை அருகே நிலை கொண்டிருந்த நிலையில், சென்னை மற்றும் &nbsp;அதன் புறநகர்ப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட் டம் எண்ணூரில் அதிகபட்சமாக 26 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஏன் தாமதமாக மழை கொட்டித் தீர்த்தது? புயல், இலங்கையின் மட்டக்களப்புக்கு அருகே உருவான போது, அது வங்கக்கட லின் கடலோரப் பகுதியை ஒட்டி வராமல், இலங்கையின் நிலப் பகுதியின் ஊடாக பய ணித்தது. நிலப்பரப்பில் பயணிக்கும் போது ஏற்படும் உராய்வு விசை காரணமாக, புயல் வலுவிழந்து தீவிர புயலாக மாற வில்லை என்று ரமணன் விளக்கினார். புயல் வங்கக்கடல் பகுதிக்கு வந்த போது, &nbsp;மேல் திசையிலிருந்து வறண்ட காற்று தமிழக கடற்கரையை ஒட்டி வீசியது. மேல டுக்கில் செங்குத்தான காற்று முறிவு இருந்தது. அதாவது, கீழேயுள்ள காற்று &nbsp;சாதகமாக இருந்தாலும், சுமார் 6 கிலோ மீட்டர் உயரத்திற்கு மேலே மேற்கு திசையி லிருந்து நிலக்காற்று வேகமாக வீசியது. இந்த காற்று முறிவு காரணமாக, மேகங்கள் &nbsp;உருவாகினாலும், அவை மீண்டும் மீண்டும் கடல் பகுதிக்கே தள்ளிவிடப்பட்டன. இதனால் &nbsp;நவம்பர் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் நிலப்பகுதிக்கு கனமழை கிடைக்கவில்லை. ஆனால் டிசம்பர் 1 ஆம் தேதி மேலடுக் கில் இருந்த காற்றின் வேகம் குறைய ஆரம் பித்தது. மேலடுக்கில் காற்று முறிவு குறைந்த தன் காரணமாக, மழை மேகங்கள் நகரை நோக்கி வர வாய்ப்பு கிடைத்தது. இத னால் டிசம்பர் 1 அன்று சென்னைக்கு அதிகப் படியான மழை கிடைத்தது என்றும் கூறி னார். மேற்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை டிச.3 ஆம் தேதி மேற்கு மாவட்டங் களான நீலகிரி, கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் டிச.4 அன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. தாழ்வுப் பகுதி கரையைக் கடந்த பின்னும், கடலிலிருந்து காற்று வருவதால், கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் உட்பட &nbsp;தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் டிச.4 அன்று &nbsp;மழை இருக்கும் என்று ரமணன் தெரி வித்தார். டிசம்பர் 3 ஆம் தேதிக்குப் பிறகு &nbsp;மழைப் பொழிவு ஓரளவு குறைய ஆரம்பிக் கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.