தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சீருடைக்கான தொகையை வழங்கக்கோரி ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

13 Aug 2026, 12:28 am
சீருடைக்கான தொகையை வழங்கக்கோரி ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

சீருடைக்கான தொகையை வழங்கக்கோரி ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி, ஆக. 12-ரயில்வே தொழிலாளர்களுக்கும் டவர் டிரைவர்களுக்கும் சீருடைக்கான தொகையை உடனடியாக வழங்க வலி யுறுத்தி தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிர்வாகத்தைக் கண்டித்து DREU - CITU சார்பில் சாமல்பட்டி ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ரயில்வே தொழிலாளர்களுக்குச் சீருடைக்கான தொகை வழங்குவதில் சேலம் கோட்ட நிர்வாகம் பாரபட்சம் காட்டுவதாகவும், டீசல் லோகோ ஷெட், எலக்ட்ரிக்கல் லோகோ ஷெட், TRD/OHE, PSI மற்றும் டவர் டிரைவர்களுக்கு 5 ஆண்டுகளாகச் சீருடைத் தொகையை வழங்காமல் வஞ்சிப்பதாகவும் குற்றம் சாட்டி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், தெற்கு ரயில்வே மற்றும் சேலம் கோட்ட நிர்வாகம் பாரபட்சமின்றி உடனடியாக அனைவருக்கும் சீருடைத் தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

சாமல்பட்டி ரயில்வே நிலையம் மற்றும் இரண்டு ஷெட் கேட் முன்பாகவும், TRD/OHE அமைப்பின் அனைத்து டிப்போக்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நிகழ்வில், மண்டலச் செயலாளர் முத்துகிருஷ்ணன் கோரிக்கைகளை வலியுறுத்திச் சிறப்புரையாற்றினார். கிளைச் செயலாளர் ரவி மற்றும் துணைச் செயலாளர் சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். கிளைத் தலைவர் சிலம்பரசன், துணைச் செயலாளர் மதிவாணன், நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், அருள், அசோக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.