14 ஆண்டுகளாக உயர்வின்றி வழங்கப்படும் போனஸ் டிஆர்இயு தொழிலாளர்கள் போராட்டம்
6 Oct 2026, 8:49 pm
<p><strong>14 ஆண்டுகளாக உயர்வின்றி வழங்கப்படும் போனஸ் டிஆர்இயு தொழிலாளர்கள் போராட்டம்</strong></p><p>சென்னை, அக். 6 -போனஸ் உயர்வு வழங்க கோரி செவ்வாயன்று (அக்.6) தெற்கு ரயில்வே முழுவதும் தொழிலாளர்கள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.ரயில்வே துறையில் கடந்த 14 ஆண்டுகளாக போனஸ் உயர்வு வழங்கப்படவில்லை, போனஸ் கணக்கீட்டிற்கான உச்சவரம்பை உயர்த்த ஒன்றிய அரசுமறுத்து வருகிறது. </p><p>ரயில்வேயில் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தில் மொத்த வருவாய் சுமார் 3 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இருப்பினும் போனஸ் உச்ச வரம்பை மாற்ற மறுக்கிறது.இதனை கண்டித்து தட்சிண ரயில்வே எம்பிளாயீஸ் யூனியன் சார்பில் தெற்கு ரயில்வே முழுவதும் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர். அப்போது, போனஸ் கணகீட்டிற்கான அடிப்படை ஊதியத்தை 7ஆயிரம் ரூபாயிலிருந்து, 28ஆயிரத்து440 ரூபாயாக உயர்த்த வேண்டும், 78 நாள் போனசை உற்பத்தி திற னுக்கு ஏற்ப உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினர்,இந்த போராட்டத்தின் ஒருபகுதியாக தாம்பரம் மின்சார ரயில் பெட்டி பராமரிப்பு பணிமனையில் ஆர்ப்பாட்டம்நடைபெற்றது. டிஆர்இயு பொதுச் செயலாளர் பேபிசகிலா, கிளைத்தலைவர்கள் ஆறுமுகம், சர்மா, கிளைச் செயலாளர் கள் ரமேஷ், ஜெயராஜ் முறியட், ஓய்வூதியர் சங்கத் தலைவர்ராமமூர்த்தி மற்றும் செபஸ்டின், சுதர்சன் உள்ளிட்டோர் பேசினர்.</p>
