தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

7 Mar 2026, 2:36 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

உற்பத்திச் செலவு ரூ.15; விற்பனை விலை ரூ.4 தக்காளி விவசாயிகள் கவலை

ஈரோடு, மார்ச் 7- தாளவாடி மலைப்பகுதியில் தக்காளி கொள்முதல் விலை கிலோ ரூ.4 ஆக சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந் துள்ளனர். தமிழக - கர்நாடகா மாநில எல்லையிலுள்ள தாளவாடி, பனகஹள்ளி, தொட்டகாஜனூர், பாரதி நகர், கெட்டவாடி, தல மலை மற்றும் அருள்வாடி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட  கிராமங்களில் கத்திரி, வெண்டை, தக்காளி, சின்னவெங்கா யம் ஆகியவற்றை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்ற னர். 3 மாத பயிரான தக்காளி சுமார் 300 ஏக்கர் நிலப்பரப் பில் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது தக்காளி அறு வடைக்கு தயாராக உள்ளது. கோடை வெயில் என்பதால் தக்காளி 2 நாட்களுக்கு மேல் செடியிலேயே பழுத்துவிடும். தற்போது விவசாயிகள் தக்காளியை அறுவடை செய்து வருகின்றனர். ஒரே நேரத்தில் தக்காளி அறுவடைக்கு வந் துள்ளதால், அதன் விலை கடுமையாக சரிந்துள்ளது. அதன் படி, கடந்த மாதம் கொள்முதல் விலை கிலோ ரூ.12 வரை  இருந்த நிலையில், வெள்ளியன்று ரூ.4 ஆக சரிந்துள்ளது. தக்காளி உற்பத்தி செலவு ரூ.15-ஆக இருப்பதால், பெரும் நஷ் டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையுடன் தெரி வித்துள்ளனர்.

சிறுமியை கடத்தி வன்கொடுமை 20 ஆண்டுகள் சிறை தண்டனை

தருமபுரி, மார்ச் 7- சிறுமியை ஏமாற்றி கடத்திச் சென்று பாலியல் வன்கொ டுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண் டனை விதித்து தருமபுரி போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தர விட்டது. தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த 17 வயதான சிறுமி, உடல்நிலை சரியில்லாத தனது தாயுடன் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்.22 ஆம் தேதியன்று சிகிச்சைக் காக கம்பைநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சென்றாா். அப்போது, காரிமங்கலம் வட்டம், ஜக்குபட்டி அருகே உள்ள  மல்லசமுத்திரம் பகுதியை சேர்ந்த சு.பெருமாள் (43) என்ப வர், மருத்துவமனையிலிருந்த சிறுமியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் கம்பைநல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிந்து சிறுமியை தேடி வந்த னர். இந்நிலையில், 5 நாட்கள் கழித்து காவல் நிலையத்தில் ஆஜரான சிறுமி, தன்னை பெருமாள் கடத்திச்சென்று, திரு மணம் செய்துகொள்ளுமாறு கூறினார். மேலும், தனக்கு பாலி யல் தொந்தரவு செய்தார் என வாக்குமூலம் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிந்த போலீசார், பெருமாளை போக்சோ  சட்டத்தின்கீழ் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை தருமபுரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வெள்ளி யன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதிசெய்யப்பட் டது. இதனையடுத்து, போக்சோ சட்டப்பிரிவு உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பெருமாளுக்கு 20 ஆண்டுகள், 5 ஆண்டு கள், 1 ஆண்டு என 3 பிரிவாக சிறை தண்டனையை ஏக காலத் தில் அனுபவிக்க வேண்டும். மேலும், ரூ.30 ஆயிரம் அபராத மும் விதித்து நீதிபதி அசின்பானு தீர்ப்பளித்தார்.

கோடைக்கால சிறப்பு மலைரயில் இயக்கம்

கோவை, மார்ச் 7- நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, உதகை மலை ரயில் பாதையில் சிறப்பு கோடைக்கால ரயில்கள் இயக்கப் பட உள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் ஜி. மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார். வரும் மார்ச் 27 ஆம் தேதி முதல் ஜூலை 6 ஆம் தேதி வரை இந்த  சிறப்பு இரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் இடையே  வாரந்தோறும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 09.10 மணிக்கு சிறப்பு இரயில் (வண்டி எண்: 06171) புறப்பட்டு, மதியம் 02.25 மணிக்கு ஊட்டி சென்றடையும். மறு மார்க்கமாக, உதகமண்டலம் - மேட்டுப்பாளையம் இடையே சனி மற்றும் திங்கட்கிழமைகளில் காலை 11.25 மணிக்கு சிறப்பு இரயில் (வண்டி எண்: 06172) புறப்பட்டு, மாலை 04.20  மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும். மேலும், உதகமண்டலம் - குன்னூர் இடையே வாரந் தோறும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 02.50 மணிக்கும், குன்னூர் - உதகமண்டலம் இடையே சனி  மற்றும் திங்கட்கிழமைகளில் காலை 09.20 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதுதவிர, குன்னூர் - உதக மண்டலம் இடையே வெள்ளி முதல் திங்கள் வரை தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் கூடுதல் சிறப்பு ரயில் கள் இயக்கப்படும். சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில், உதகமண்டலம் - கேத்தி இடையே நாளொன்றுக்கு மூன்று  முறை ‘ஜாய் ரைடு’ (Joy Ride) எனப்படும் ரவுண்ட் ட்ரிப்  சிறப்பு இரயில்களும் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்கள் வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் இயக் கப்படும். மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே 40 முதல் வகுப்பு இருக்கைகளும், 140 இரண்டாம் வகுப்பு இருக்கை களும் ஒதுக்கப்பட்டுள்ளன. குன்னூர் - உதகமண்டலம் இடையே 80 முதல் வகுப்பு இருக்கைகள் வசதி செய்யப் பட்டுள்ளது.

ரயில்வே டிக்கெட் பரிசோதனை பிப்., மாதத்தில் ரூ.2.32 கோடி வசூல்

கோவை, மார்ச் 7- சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட கோவை உள்ளிட்ட பல்வேறு நிலையங்களில் கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப் பட்ட தீவிர டிக்கெட் பரிசோதனையில் ரூ.2.32 கோடி அபராத மாக வசூலிக்கப்பட்டுள்ளது. இது சேலம் கோட்ட வர லாற்றிலேயே ஒரு மாதத்தில் ஈட்டப்பட்ட மிக அதிகபட்ச வரு வாய் என்பது குறிப்பிடத்தக்கது. சேலம் கோட்டத்திற்குட்பட்ட டிக்கெட் பரிசோதகர்கள் மேற்கொண்ட 5,437 சோதனைகளில் மொத்தம் 28,306 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டன. இதில் டிக்கெட் இன்றி பயணம் செய்த 14,891 நபர்களிடமிருந்து ரூ.1.42 கோடியும், உரிய முறையற்ற பயணங்களை மேற்கொண்ட 13,368 நபர்களிடமி ருந்து ரூ.89.72 லட்சமும் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 20.7 சதவீத கூடுதல் வருவாயாகும். மேலும், அனுமதிக்கப் பட்ட அளவை விட கூடுதல் சுமை (லக்கேஜ்) கொண்டு சென்ற 47 வழக்குகளில் ரூ.38,442 வசூலிக்கப்பட்டது. பயணி கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் மட்டுமே பய ணம் செய்ய வேண்டும். மூத்த குடிமக்கள் சலுகையை தவறாக பயன்படுத்துவது தண்டனைக்குரியது என்றும் ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் ஜி. மாரிய மைக்கேல் எச்ச ரித்துள்ளார்.

பயணிகளை அலட்சியப்படுத்திய சம்பவம் அரசு பேருந்து ஓட்டுநர்கள் 2 பேர் சஸ்பெண்ட்

திருப்பூர், மார்ச் 7- திருப்பூரில் பெண் பயணிகளிடம் முறையற்ற முறையில்  நடந்துகொண்டதாக இரண்டு அரசு போக்குவரத்துக் கழக  பேருந்து ஓட்டுநர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள் ளனர்.  கடந்த பிப்.21 ஆம் தேதி இரவு திருப்பூரிலிருந்து நம்பியூர்  நோக்கிச் சென்ற பேருந்து (டிஎன் 33 என் 3641), பிச்சம்பாளை யம் பகுதியில் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது. பின்னர்  பேருந்தில் ஏறிய பெண் பயணிகள் இதுகுறித்து கேள்வி எழுப் பியபோது, ஓட்டுநர், எல்லா நிறுத்தத்திலும் நிறுத்த முடியாது  எங்கு வேண்டுமானாலும் புகார் செய்யுங்கள்” என தெரிவித்த தாகக் கூறப்படுகிறது. அதேபோல் கடந்த பிப்.2 மதியம் திருப் பூரிலிருந்து பெருமாநல்லூர் சென்ற பேருந்தில் (டிஎன் 33 என்  3551), ரயில் நிலையப் பகுதியில் ஏற முயன்ற பெண் பயணி  உள்ளே வருவதற்குள் தானியங்கி கதவை மூடிவிட்டு பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளனர். பயணி கூச்சலிட்டும் கத வைத் திறக்கவில்லை. இதுபற்றி கேட்ட பயணிகளிடம் ஓட்டுந ரும் நடத்துநரும் பொறுப்பற்ற முறையில் பதிலளித்ததாக வும், ஒருமையில் பேசி அநாகரிகமாக நடந்துகொண்டதாக திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத் தலைவர் ஈ.பி.அ. சரவணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித் துள்ளார். இந்த இரு சம்பவங்கள் தொடர்பாகவும் விசாரணை  நடத்திய ஈரோடு மண்டல பொது மேலாளர், சம்பந்தப்பட்ட இரண்டு ஓட்டுநர்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவ டிக்கையாக பணியிடை நீக்கம் செய்தும், இரண்டு நடத்துநர் களுக்கு மெமோ அளித்தும் உத்தரவிட்டுள்ளார்.

பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.2 ஊக்கத்தொகை: மாவட்ட ஆட்சியர் தகவல்

திருப்பூர், மார்ச் 7- திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள்  ஒன்றியத்தில் (ஆவின்) பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்க ளுக்கு அரசு வழங்கும் ஊக்கத்தொகையான லிட்டருக்கு  ரூ.3  உடன்  லிட்டருக்கு ரூ.2 கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்ப டும் என மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள் ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தற்போது கோடைக்காலம் தொடங்கி உள்ளது. இந்நிலையில், கடுமை யான வெப்பத்தின் தாக்கம் மற்றும் பசுந்தீவனப் பற்றாக்குறை  காரணமாக கிராமப்புறங்களில் பால் உற்பத்தி கணிசமாக  குறைந்து வருகிறது. இதனால் பால் உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் நிதி இழப்பை சரி செய்யவும், அவர்களின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்ட  ஆவின் ஒன்றியத்திற்குட்பட்ட பால் உற்பத்தியாளர் கூட்டு றவு சங்கங்கள் மூலம் பால் வழங்கும் உற்பத்தியாளர் களுக்கு, அவர்கள் வழங்கும் ஒவ்வொரு லிட்டர் பாலுக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் கொள்முதல் விலை மற்றும்  அரசு வழங்கும் ஊக்கத்தொகையான லிட்டருக்கு ரூ.3 உடன்  கூடுதலாக ரூ.2 ஊக்கத்தொகையாக வழங்கப்பட உள்ளது  தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் பறவைக்காய்ச்சல் இல்லை

தருமபுரி, மார்ச் 7- மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு இல்லை  என தருமபுரி ஆட்சியர் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில், தருமபுரியில் பழைய மாவட்ட ஆட்சியரக வளா கம் உட்பட சில இடங்களில் கடந்த மார்ச் 1 ஆம் தேதியன்று காகங்கள் இறந்து கிடந்தன. இதைய டுத்து, பறவைக்காய்ச்சல் தொற்று உள்ளதா? என மருத்துவக்குழுவினர், காகங்களின் உடல்களை மீட்டு, அதன் மாதிரிகளை சோதனைக்கு அனுப்பி வைத்த னர். அதில் எவ்வித பாதிப்பும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கோழி இறைச்சி, முட் டைகளை பொதுமக்கள் நன்றாக சமைத்து உட்கொள் ளலாம். மேலும், பறவைக்காய்ச்சல் குறித்து பொது மக்கள் யாரும் அச்சப்பட அவசியமில்லை என தெரி விக்கப்பட்டுள்ளது.

விடுதியில் மாணவர்கள் மோதல்

சேலம், மார்ச் 7- மரவனேரி அரசு மாணவர் விடுதியில் வெள்ளி யன்று ‘பிரீ பையர்’ கேம் விளையாடியதில் மாணவர் களிடையே ஏற்பட்ட மோதல் பெரும் வன்முறையாக மாறியது.  சேலம், அம்மாபேட்டையை சேர்ந்த குருதேவன் மற்றும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த திருமூர்த்தி ஆகியோ ரிடையே விளையாட்டில் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, குருதேவன் தனது நண்பர்களுடன் (வெளி நபர்கள்) விடுதிக்குள் புகுந்து மாணவர்களை தாக்கி யுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த அஸ்தம் பட்டி போலீசார், மோதலில் ஈடுபட்டவர்களின் 5 செல் போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். விடுதி காப்பாளர் முறையாக பணிக்கு வராததே இதுபோன்ற அத்துமீறல்களுக்கு காரணம் என மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது விடுதி காப்பாளர் துரைசாமி கூடுதல் பொறுப்பாக கவனித்து வரும் நிலையில், வெளிநபர்கள் புகுந்து தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி யுள்ளது.

பணிவரன்முறை செய்ய வலியுறுத்தல்

ஈரோடு, மார்ச் 7- பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் தினக்கூலி  பணியாளர்களை பணிவரன் முறை செய்ய அர சாணை பிறப்பிக்க வேண்டுமென தமிழ்நாடு பொதுப் பணித்துறை ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.காசிவிஸ்வநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவ லக கட்டுமானப் பணிகள் மற்றும் பராமரிப்புப் பணி களை, தினக்கூலி பணியாளர்களே செய்து வருகின்ற னர். இத்துறைகளில் சிலர் 25 ஆண்டுகளுக்கு மேலாக வும், சிலர் 30 ஆண்டுகளுக்கு மேலாகவும் பணியாற்றி  வருகிறார்கள். அவ்வப்போது பணி ஓய்வு பெற்றும் வருகிறார்கள். மேட்டூர், பவானிசாகர், ஆழியார், அமராவதி, திரு மூர்த்தி, வைகை அணைக் கட்டுகளில் நிரந்தர பணி யாளர்கள் மிகக் குறைவு. குறிப்பாக, 5000க்கும் மேற் பட்ட பணியிடங்கள் இத்துறைகளில் காலியாக இருந் தும் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இப்பணி யாளர்களுக்கு தினக்கூலி ஊதியத்தை தவிர எவ்வித சலுகைகளும் கிடையாது. அரசாணை எண்.233 நாள்  6.12.2019-ன்படி குறைந்தபட்ச ஊதியம் ரூ.15700 மற்றும்  அகவிலைப்படியை தவிர வேறு எவ்வித சலுகைக ளும் கிடையாது. வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை கூட விடுப்பு எடுக்காமல் வேலை செய்யும் நிலை உள்ளது.  பணியாளர்கள் இறந்துவிட்டாலோ பணி ஓய்வு பெற்றா லும் கூட எவ்வித பணப்பயன்களும் வழங்குவது இல்லை. தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் காலத்தில் பொதுப்பணித்துறையில் 10 ஆண்டுகள் பணி செய்த  தினக்கூலி பணியாளர்களை பணிவரன் முறை செய்திட அரசாணை எண்.334-ஐ 2007-ல் பிறப்பிக்கப்பட்டது. அதன் படி 1056 தினக்கூலி பணியாளர்கள் பொதுப்பணித் துறையில் பயன்பெற்றனர். அதன் பின்னர் கலைஞ ரால் 2010-ல் அரசாணை எண்.134 வெளியிட்டார். அப் போது 734 தினக்கூலி பணியாளர்கள் பயனடைந்தனர். அதன்பிறகு 2011-ல் 10 ஆண்டுகள் பணி நிறைவு) செய்த 1458 தினக்கூலி பணியாளர்களை நிரந்தரம் செய்வதற்கு உரிய கருத்துருக்கள் அரசுக்கு அனுப் பப்பட்டு அக்கோப்புகள் இன்று வரை செயல்படுத்தப் படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும், அர சாணை.233-ல் மொத்தம் 3408 தினக்கூலி பணியாளர் கள் உள்ள நிலையில் இவ்வரசாணையில் உள்ள 10 ஆண்டுகள் நிறைவு செய்த பணியாளர்களை நிரந்தரப் படுத்துவதற்கான கருத்துருக்கள் அரசுக்கு அனுப் பப்படாமல் உள்ளது. எனவே மேற்படி அரசாணையில் உள்ள 3408 தினக்கூலி பணியாளர்களை காலியாக உள்ள 5000 பணியிடங்களில் பூர்த்தி செய்யும் வகை யில் பணியில் உள்ள தினக்கூலி பணியாளர்களை நிரந்தரம் செய்திட வேண்டி பலமுறை அமைச்சர்க ளுக்கு மனு அளிக்கப்பட்டது. பல கவன ஈர்ப்பு போராட்டங்கள் செய்தும் எவ்வித  பலன்களும் கிடைக்கவில்லை. தமிழக முதல்வர் கவ னத்திற்கு கொண்டு செல்லும் வகையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டமன்ற கூட்டத் தொட ரில் இந்த தினக்கூலி பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்கள் லஸ்கர் பணி செய்து வரு வதால்தான் தமிழகம் முழுவதும் உள்ள கொப்பு வாய்க்கால்களுக்கு நீரைக் கொண்டு சென்றும், தஞ்சையிலே இருக்கக்கூடிய கடைமடை விவசாயிக ளின் பாசனத்திற்கு நீர் கிடைக்கச் செய்கிறார்கள் என்பது போன்ற கருத்தினை தெரிவித்து உள்ளார். எனவே, தேர்தல் வாக்குறுதிப்படி கட்டாயம் தினக் கூலி பணியாளர்களை நிரந்தரம் செய்து விடுவார்  என்ற நம்பிக்கையில் இருந்த நிலையில் ஆட்சிக்காலம்  முடிவடையும் தருவாயில் உள்ளது. ஆயினும் கூட இன் னும் பரிதவிப்புடன் எதிர்பார்த்து கொண்டிருகிறார் கள். தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஊழியர் சங்கம் உட்பட இத்துறைகளில் உள்ள நான்கு துறை சங்கங்க ளும் இக்கோரிக்கை குறித்து பலமுறை போராட்டம் செய்துள்ளார்கள். இறுதியாக பொதுப்பணித்துறை அமைச்சரின் வீட்டின் முன்பு கூட போராட்டம் செய்யப் பட்டது. எனவே, பல்வேறு நலத்திட்டங்களை அறி வித்து செயல்படுத்தி வரும் அரசு, அரசாணை எண்.233-ல் உள்ள 3408 தினக்கூலி பணியாளர்களும் பணி நிரந்தரம் செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து வழக்கில் 2 ஆண்டுகள் சிறை

ஈரோடு, மார்ச் 7- ஈரோடு மாவட்டம், கெட் டிச்செவியூர் பள்ளிபா ளையம் புதுக்காலனி பகு தியை சேர்ந்தவர் சுந்தரம் (60). இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதி  தனது மனைவி பூங்கொடியு டன், கோபியில் உள்ள உற வினரின் வீட்டுக்கு வந்துள் ளார். வரும் வழியில் பின் னால் வந்த கார், சுந்தரம் ஓட் டிச்சென்ற இருசக்கர வாக னத்தின் மீது மோதியது. இதில் சுந்தரம் உயிரிழந்தார். இதுகுறித்த வழக்கை விசா ரித்த கோபி ஜெ.எம்.1 நீதி மன்ற நீதிபதி, கார் ஓட்டுரான கணக்கம்பாளையத்தை சேர்ந்த ஞானவேல் (42) என்ப வருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

சிறார்களுக்கு காக்ளியர் இம்ப்ளாண்ட் சிகிச்சை

நாமக்கல், மார்ச் 7- நாமக்கல் அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனையில், பிறவி காது கேளாத இரண்டு சிறுவர்க ளுக்கு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சம் மதிப்பிலான காக் ளியர் இம்ப்ளாண்ட் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற் கொள்ளப்பட்டது. நாமக்கல் அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனையில் இத்த கைய சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவது இதுவே முதல்முறையாகும். சர்வதேச காக் ளியர் இம்ப்ளாண்ட் தினமான (பிப்.25) இதற்கான சிறப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டிருந்தன. நாமக் கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம்,  கப்பலூத்து பகுதியைச் சேர்ந்த  ராஜ்குமார் – நர்மதா தம்பதியின ரின் மகன் பிரவனேஷ் (4) மற்றும்  நாமக்கல் மாவட்டம், சிங்களாந்த புரம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் –  சண்முகப்பிரியா தம்பதியினரின் மகன் லட்சுமணன் (5) ஆகிய இரண்டு குழந்தைகளுக்கு நாமக் கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் காக்ளியர் இம்ப் ளாண்ட் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப் பட்டது.  மருத்துவக் கல்லூரி முதல்வர்  பேராசிரியர் மருத்துவர் குணசேக ரன் தலைமையில், காது, மூக்கு, தொண்டை துறைத் தலைவர் பேரா சிரியர் மருத்துவர் கவிதா முன்னி லையில் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல மருத்துவர் மோகன்  காமேஸ்வரன் கலந்துகொண்டு அறுவை சிகிச்சையை வழிநடத்தி னார். தனியார் மருத்துவமனைக ளில் பல லட்சங்கள் செலவாகக் கூடிய இந்த உயர்தர சிகிச்சை, தமிழ்நாடு முதலமைச்சரின் விரி வான மருத்துவக் காப்பீட்டுத் திட் டத்தின் கீழ் ஒரு குழந்தைக்கு ரூ. 8  லட்சம் வீதம், மொத்தம் ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் முற்றிலும் இலவச மாக வழங்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் இருக்கும் சிறுவர்களை சனியன்று பார்வையிட்ட மாவட்ட  ஆட்சியர் துர்காமூர்த்தி, மருத்து வக்குழுவினரின் இந்த மகத்தான  சாதனையைப் பாராட்டி வாழ்த்து களை தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்: “அரசு மருத்துவமனையிலேயே இத்தகைய நவீன சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படு வது இந்த மாவட்ட மக்களுக்குக் கிடைத்துள்ள பெரும் வரப்பிரசாத மாகும். இதன் மூலம் ஏழை, எளிய  குடும்பங்களை சேர்ந்த குழந்தை கள் இனி தடையின்றி கேட்கும் திற னைப் பெற முடியும்,” என்றார்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு மிரட்டல்: சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சிஐடியு வலியுறுத்தல்

கோவை, மார்ச் 7- தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான டாஸ்மாக் நிர்வா கத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தில் உள்ள  குளறுபடிகளை சரிசெய்ய வேண் டும் என சிஐடியு வலியுறுத்தியுள் ளது. இதுகுறித்து சிஐடியு கோவை  மாவட்டக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதா வது, தமிழகம் முழுவதும் 4800க்கும் மேற்பட்ட மது விற்பனையகங்கள் மூலம் சுமார் 25 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்க ளின் உழைப்பால் தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக் கிறது. இது மாநிலத்தின் மொத்த வரு வாயில் ஐந்தில் ஒரு பங்காகும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த  துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தற்போது பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த 01.04.2023 முதல் கோவையில் காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால், இத்திட்டத்தை செயல்படுத்தத் தேவையான எவ்வித உட்கட்ட மைப்பு வசதிகளையும் டாஸ்மாக் நிர்வாகம் இதுவரை செய்து தர வில்லை. பாட்டில்களில் ஸ்டிக்கர்  ஒட்டுவது முதல், காலி பாட்டில்களை சேகரிப்பது மற்றும் அவற்றை வைப் பதற்கான இடத்திற்கு வாடகை கொடுப்பது வரை அனைத்து பணி ளையும் ஊழியர்களே தங்கள் சொந்த பொறுப்பில் செய்ய வேண்டி யுள்ளது. இது அவர்களுக்கு கடும் மன உளைச்சலையும் நிதி இழப்பை யும் ஏற்படுத்துகிறது. இந்நிலையில், காலிப்பாட்டில் களை சேகரிக்க டெண்டர் எடுத்திருப் பதாக கூறிக்கொள்ளும் சில நபர் கள், கடைகளுக்கு சென்று ஊழியர் களை மிரட்டுவதாகவும், பணம் கேட்டு அச்சுறுத்துவதாகவும் புகார் கள் எழுந்துள்ளன. இத்தகைய சமூக விரோதச் செயல்களால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசும் டாஸ்மாக் நிர்வாகமும் உடனடியாக தலையிட வேண்டும். ஊழியர்களை மிரட்டும் சமூக  விரோதிகள் மீது மாவட்ட நிர்வாக மும், டாஸ்மாக் நிர்வாகமும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுடன் ஏற்கனவே மேற்கொள் ளப்பட்ட பேச்சுவார்த்தையின்படி, மது உற்பத்தி நிறுவனங்களே பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டி வழங்க வேண்டும். ஊழியர்களின் நலன் பாதிக்காத வகையில், தனியாக ஒரு  முகமை மூலம் காலிப்பாட்டில்களை திரும்பப் பெறும் பணியை செயல் படுத்த வேண்டும் என அதில் வலியு றுத்தியுள்ளது.

புதிய வாக்காளர் பட்டியலில் முகவரி இல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார்

கோவை, மார்ச் 7- புதிய வாக்காளரின் முகவரி இல்லாத வாக்காளர் பட்டியலை முறைப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேர்தல் வாக்குச்சாவடி இணைப்பு குறித்த அனைத்துக் கட்சி கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.அஜய்குமார் மற்றும் கிழக்கு நகரச் செயலாளர் என்.சுபாஷ் ஆகியோர் பங்கேற்றனர். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் பேசுகையில், கடந்த பிப்ரவரி 23-ம் தேதி (23.02.2026) வெளியிடப்பட்ட புதிய வாக்காளர் சேர்க்கைப் பட்டியலில், வாக்காளரின் பெயர், தந்தை பெயர், பாலினம் மற்றும் வயது மட்டுமே இடம் பெற்றுள்ளது. அவர்கள் வசிக்கும் வீதி, லே-அவுட் அல்லது நகர் போன்ற முகவரி விவரங்கள் விடுபட்டுள்ளன. முகவரி இல்லாத நிலையில், புதிய வாக்காளர்களை அரசியல் கட்சியினர் நேரில் சந்தித்து விவரங்களை சேகரிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் ‘பூத் ஸ்லிப்’ விநியோகிக்கும் அரசு ஊழியர்கள், வாக்காளரின் இருப்பிடத்தை கண்டறிய முடியாமல் திணறும் சூழல் உருவாகும். இதனால் பலருக்கு பூத் ஸ்லிப் சென்றடையாத நிலை ஏற்படும். மேலும், சிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் நாடார் உயர்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி எண் 333-ல் வெறும் 63 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். எனவே, இந்த வாக்குச்சாவடியை அருகிலுள்ள மற்றொரு வாக்குச்சாவடியுடன் இணைக்க வேண்டும். புதிய வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ள முகவரி விவரங்களை உடனடியாகச் சேர்த்து, பட்டியலை முறைப்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு இக்கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.