ரயில்நிலைய மேலாளர்கள் ஆர்ப்பாட்டம்
5 Mar 2026, 3:59 pm
<p><strong>ரயில்நிலைய மேலாளர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>திருச்சிராப்பள்ளி, மார்ச் 5- தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் கடந்த 25ஆம் தேதி திருவாரூர் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது பயணிகள் ஓய்வறையில் கழிவறை முறையாக பராமரிக்கப்படவில்லை எனக்கூறி பொதுமக்கள், பிறத் துறை அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில், பணியில் இருந்த நிலைய அதிகாரியை அநாகரீக முறையில் பேசியதை கண்டித்தும், இதனால், நிலைய அதிகாரிகளுக்கு ஏற்பட்ட மன உளசைச்சல் காரணமாக ஒட்டு மொத்த நிலைய மேலாளர்கள் தங்களுடைய கண்டனத்தை தெரிவிக்கும் வகையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய நிலைய அதிகாரிகள் சங்க திருச்சி கோட்டம் சார்பில் புதனன்று திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அகில இந்திய நிலைய அதிகாரிகள் சங்க திருச்சி கோட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், அகில இந்திய நிலைய அதிகாரிகள் சங்க மண்டல தலைவர் பழனிவேல், முன்னாள் கோட்டச் செயலாளர் சுந்தரம், டி.ஆர்.இ.யு திருச்சி கோட்ட தலைவர் சிவக்குமார், திருச்சி கோட்டச் செயலாளர் கரிகாலன், உதவி கோட்ட தலைவர் ஜாய் சார்லஸ் டிக்கன்ஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
