தாம்பரம் ரயில் நிலையத்தில் 13 மின்தூக்கிகள் 10 நகரும் படிக்கட்டுகள் அமைக்கத் திட்டம் சு.வெங்கடேசன் எம்.பி., கடிதத்திற்கு தெற்கு ரயில்வே தகவல்
11 Jul 2026, 10:42 pm
<p><strong>தாம்பரம் ரயில் நிலையத்தில் 13 மின்தூக்கிகள் 10 நகரும் படிக்கட்டுகள் அமைக்கத் திட்டம் சு.வெங்கடேசன் எம்.பி., கடிதத்திற்கு தெற்கு ரயில்வே தகவல்</strong></p><p>சென்னை, ஜூலை 11- மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், தாம்பரம் ரயில் நிலை யத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், கூடுதல் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் தெற்கு ரயில்வேக்குக் கடிதம் எழுதியிருந்தார். இதற்குப் பதில் அளிக்கும் வகையில், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான விளக்கத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். தென் மாவட்டப் பயணிகளின் மிக முக்கியமான போக்குவரத்து மைய மாகத் திகழும் தாம்பரம் ரயில் நிலை யத்தில், பயணிகளின் வசதிகளை மேம்படுத்தவும் உள்கட்டமைப்பை நவீனப்படுத்தவும் தெற்கு ரயில்வே நிர்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரு கிறது. மதுரை மக்களவை உறுப்பி னர் சு. வெங்கடேசன், தாம்பரம் நிலை யத்தில் கூடுதல் வசதிகளைச் செய்து தரக் கோரி விடுத்த கோரிக்கையை ஏற்று, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த விரிவான விளக்கங்களை அளித்துள்ளார். தற்போது தாம்பரம் நிலையத்தில் ஏற்கெனவே 6 நகரும் படிக்கட்டுகளும், ஒரு மின்தூக்கியும் பயணி களின் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், இதனை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பழைய நடைமேம்பாலத்துடன் இணைக்கும் வகையில் கூடுதலாக 4 புதிய மின்தூக்கிகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரு கின்றன. இவை மார்ச் 2027-ஆம் ஆண்டிற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, நிலையத்தின் அனைத்து நடைமேடைகளையும் இணைக்கும் வகையில் அமைக்கப் பட்டு வரும் புதிய நடைமேம் பாலத்தில், பயணிகளின் வசதிக்காக 9 மின்தூக்கிகள் மற்றும் 10 நகரும் படிக்கட்டுகள் என அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. நிலையத்தின் அணுகுமுறை வசதிகளை மேம்படுத்தும் விதமாக, கிழக்கு நுழைவு வாயிலில் புதிய நடைமேம்பாலத்தை இணைக் கும் வகையில் பிரத்யேக நடை பாதை அமைக்கும் பணி தொடங்கப் பட்டுள்ளது. இதில் போதுமான மின்விளக்கு வசதிகளும், பேருந்து நிலையம் வரை பயணிகளுக்கு இடை யூறின்றிச் செல்லும் வகையிலான வசதிகளும் செய்யப்படுகின்றன. இப்பணிகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மேற்கு நுழைவு வாயிலில் ஜி.எஸ்.டி சாலை வழியாக வரும் பயணிகளுக்காக, தடையற்ற போக்குவரத்து மற்றும் வசதியான வாகன இறக்கம் கொண்ட புதிய நுழைவாயில் மற்றும் வாகன நிறுத்துமிடம் அமைக்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது. மேலும், பழைய நிலையக் கட்டிடத்தை புதிய நடை மேம்பாலத்துடன் இணைக்கும் வசதி யும் இத்திட்டத்தில் சேர்க்கப் பட்டுள்ளது. தற்போது நடைமேடை 5 முதல் 10 வரை மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக மூன்று மின்சார வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணி களின் நலனை முன்னிறுத்தி ரயில்வே நிர்வாகம் எடுத்து வரும் இந்த உள்கட்ட மைப்பு மேம்பாட்டுப் பணிகள், எந்த விதத் தாமதமும் இன்றி திட்டமிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என்பதை சு. வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.</p>
