தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரயில்வே சிக்னல், தொலைத்தொடர்பு  ஊழியர்களுக்கு பணிச்சுமையை குறைத்திடுக!

21 Jul 2026, 9:56 pm
ரயில்வே சிக்னல், தொலைத்தொடர்பு  ஊழியர்களுக்கு பணிச்சுமையை குறைத்திடுக!

ரயில்வே சிக்னல், தொலைத்தொடர்பு  ஊழியர்களுக்கு பணிச்சுமையை குறைத்திடுக!

சென்னை, ஜூலை 21 - ரயில்வே சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு ஊழியர் களின் பணிச்சுமையைக் குறைத்து, அவர்களுக்கு நாளொன் றுக்கு 8 மணி நேர வேலையை உறுதிசெய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம், ரயில்வே வாரியத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய ரயில்வேயின் தடையற்ற இயக்கத்திற்கு வாழ்வாதாரமாகத் திகழும் சிக்னல் மற்றும் தொலைத் தொடர்பு ஊழியர்கள் சந்தித்து வரும் தீவிரப் பிரச்சனை கள் குறித்து, ரயில்வே வாரியத் தலைவரின் கவனத்திற் கும் அவர் கொண்டு சென்றுள்ளார்.

8 மணி நேர வேலை மற்றும் உடல்நலன்!

பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ஊழியர்களை 24 மணி நேரத்திற்கும் மேலாகப் பணி செய்ய நிர்பந்திப்ப தால், இதுவரை 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உயிரி ழந்துள்ளனர்; பலர் மன அழுத்தம் காரணமாகப் பணியை விட்டு விலகியுள்ளனர். எனவே, நாளொன்றுக்கு 8 மணி நேர வேலையை உறுதிசெய்து அவர்களது நலனைப் பாது காக்க வேண்டும்.

சம வேலைக்குச் சம ஊதியம்!

5-ஆவது ஊதியக் குழு வரை இருந்த ஊதியச் சம நிலை தற்போது பறிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்சி (இயற்பி யல்) தகுதி கொண்ட தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு, பிற பட்டப்படிப்பு தகுதி கொண்ட ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கு இணையான ‘சம வேலைக்குச் சம ஊதியம்’ வழங்கப்பட வேண்டும்.

தனியார்மயம், அவுட்சோர்சிங் கூடாது

பாதுகாப்பு சார்ந்த நிரந்தரப் பணிகளைத் தனி யார்மயம் ஆக்குவதையோ அல்லது அவுட்சோர்சிங் ஆக்குவதையோ முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும். ரயில்வேயின் உணர்வுப்பூர்வமான துறைகளில் காலி யாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண் டும்.

மக்களின் பாதுகாப்பான பயணத்திற்காக ஆபத்தான சூழலிலும் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றும் எஸ்டி ஊழியர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமா னவை என்பதால், ரயில்வே வாரியம் இவற்றை நேர்மறை யாகப் பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.பி. சச்சிதானந்தம் தனது கடிதத்தில் வலி யுறுத்தியுள்ளார்.

இதேகோரிக்கையை வலியுறுத்தி ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் ரயில்வே வாரியத் தலைவ ருக்கு, தென்சென்னை மக்களவை உறுப்பினர் சுமதி என்கிற தமிழச்சி தங்கப்பாண்டியனும் கடிதம் அனுப்பி யுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.