ரயில்வே அனைத்து ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
13 Jun 2026, 11:36 pm
<p><strong>ரயில்வே அனைத்து ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்</strong></p><p>திருச்சிராப்பள்ளி, ஜுன் 13- ரயில்வே ஓய்வூதியர்களை, இ-பாஸ் வாங்க சொல்லும் ரயில்வே வாரிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும். பழைய நடைமுறைப்படி பேப்பர் பாஸ் வழங்க வலியுறுத்தி தட்சிண ரயில்வே பென்சனர் சங்கம் மற்றும் ரயில்வே அனைத்து ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு சார்பில், சனிக்கிழமை பொன்மலை ஆர்மரி கேட் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, தட்சிண ரயில்வே பென்சன் சங்கத் தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி டி.ஆர்.பி.யு உதவி செயலாளர் கணேசன், டி.ஆர்.இ.யு. கோட்ட தலைவர் லெனின், கோட்டச் செயலாளர் கரிகாலன், ஆர்.பி.எப். வெல்ஃபேர் அசோசியேஷன் கலியபெருமாள், டி.ஆர்.பி.யு உதவி பொதுச்செயலாளர் மகேந்திரன், கோட்டச் செயலாளர்கள் மனோகரன், கண்ணன், ஓபன் லைன் ரிட்டையர்டு கார்டு பழனி, ஆர்.இ.பி.யு வரதராசன், டி.ஆர்.பி.யு. நிர்வாகிகள் உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், ரயில்வே அனைத்து ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.</p>
