தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஊழியர் விரோதப் போக்கை நிர்வாகம் கைவிட வேண்டும் ரயில்வே ஓய்வூதியதாரர்கள் ஆர்ப்பாட்டம்

30 Jun 2026, 10:31 pm
ஊழியர் விரோதப் போக்கை நிர்வாகம் கைவிட வேண்டும் ரயில்வே ஓய்வூதியதாரர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>ஊழியர் விரோதப் போக்கை நிர்வாகம் கைவிட வேண்டும் ரயில்வே ஓய்வூதியதாரர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>​​​​​​​சென்னை, ஜூன் 30 - ரயில்வே நிர்வாகத்தின் ஓய்வூதியதாரர் விரோதப் போக்கைக் கண்டித்தும், தன்னிச்சை யான புதிய நடைமுறைகளை ரத்துசெய்ய வலி யுறுத்தியும் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அலு வலகம் முன்பு ஓய்வூதியதாரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் களுக்கு, அவர்கள் வகித்த பதவிக்கு ஏற்ப ஆண்டுக்கு இருமுறை இலவச ரயில் பயணம் மேற்கொள்ள ‘ஓய்வுக்குப் பிந்தைய’ பிஆர்சிபி வழங்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக காகித வடிவில் வழங்கப்பட்டு வந்த இந்த பாஸ் முறையை மாற்றி, இனி ‘ரயில்வே மனிதவள மேலாண்மை அமைப்பு’ (எச்ஆர்எம்எஸ்) என்ற இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பித்து மின்னணு பாஸ் (இ பாஸ் ) பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ரயில்வே வாரியம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. பிரச்சனைகள் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்த பல ஊழியர்கள் குறைந்த கல்வித் தகுதி கொண்டவர்கள். இவர்களில் பலர் நவீனத் தொடு திரை கைபேசிகளைப் பயன்படுத்தத் தெரியாத வர்கள். மேலும், உயிரிழந்த ஊழியர்களின் விதவை மனைவிகளில் பலர் எழுதப் படிக்கத் தெரி யாதவர்களாக உள்ளனர். இத்தகைய சூழலில், இந்த உத்தரவு முதியவர்களையும், கல்வியறிவு குறைந்தவர்களையும் கடுமையாகப் பாதிக்கும் என்று ஓய்வூதியதாரர்கள் அச்சம் தெரிவிக்கின்ற னர். முதியவர்களுக்கான ரயில் பயணக் கட்டணச் சலுகையை ஏற்கெனவே ஒன்றிய அரசு ரத்து செய்த நிலையில், இந்த மின்னணு பாஸ் முறை மூலம் ஓய்வூதியதாரர்களுக்கான சலுகையும் படிப்படி யாக ஒழிக்கப்பட்டுவிடும் என அவர்கள் அஞ்சு கின்றனர். கோரிக்கைகள் எனவே, இந்த ஆர்ப்பாட்டத்தில், மின்னணு பாஸ் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரையை விரைவாகச் செயல்படுத்த வேண்டும். 2025 மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பென்ஷன் வேலிடேஷன் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக 93 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். 8-வது ஊதியக் குழு விரைந்து அமைக்க வேண்டும் என்று கோரிக் கைகள் விடுக்கப்பட்டன. தட்சிண ரயில்வே பென்ஷனர்ஸ் யூனியன் உதவித் தலைவர் என். அபிமன்யு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டனர். டிஆர்இயு செயல் தலைவர் ஏ. ஜானகிராமன், சதர்ன் ரயில்வே பென்சனர்ஸ் சமாஜ் (எஸ்ஆர்பிஎஸ்) நிர்வாகி பிரான்சிஸ்ராஜூ, அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் ஓய்வூதியர் சங்க (ஏஐஆர்ஆர்எஸ்ஏ) நிர்வாகி ஜெ. விக்டர், அகில இந்திய ரயில்வே ஓய்வூதியர் சம்மேளன நிர்வாகிகள் பிரான்சிஸ், எம்.பெருமாள், ரயில்வே பென்சனர் சங்க நிர்வாகி தமிழ்ச்செல்வன், டிஆர்இயு துணைப் பொதுச் செயலாளர் அருண்குமார் செழியன் ஆகியோர் பேசி னர். தட்சிண ரயில்வே பென்சனர்ஸ் யூனியன் டிவி ஷன் செயலாளர் ஜெகதீசன் வரவேற்றார். டிவிஷன் தலைவர் பொன்னன் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.