அம்ரித் பாரத் விரைவு ரயிலுக்கு வள்ளியூர், நாங்குநேரியில் நிறுத்தம் வழங்க ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை
11 Jan 2026, 7:00 am
<p>திருநெல்வேலி, ஜன.11- நாகர்கோவிலில் இருந்து மேற்கு வங்காளம் மாநிலம் நியூ ஜல்பைகுரி பகுதிக்கு வாராந்திர விரைவு ரயில் இயக்கிட ரயில்வே நிர்வாகம் சமீபத்தில் முடிவு செய்தது. அதன்படி இந்த 2 பகுதிகளுக்கும் இடையில் வருகிற 17 ஆம் தேதி முதல் அம்ரித் பாரத் வாராந்திர விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பில் இருந்து புறப்படுகிறது. தொடர்ந்து நெல்லை, மதுரை, திண்டுக்கல், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி,கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேனிகுண்டா, விசாகபட்டினம், புவனேஷ்வர் வழியாக மேற்குவங்காளத்திற்கு செல்கிறது.இந்த முதல் சேவையானது வருகிற 17-ஆம் தேதியில் நியூ ஜல்பைகுரியில் இருந்து தொடங்கப்பட உள்ளது. இந்த ரயிலுக்கு நெல்லை மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் மற்றும் நாங்குநேரியில் நிறுத்தம் வழங்கிட வேண்டும் என்று நாங்குநேரி ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
