தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

செய்துங்கநல்லூரில் பாலக்காடு எக்ஸ்பிரஸை நிறுத்திச் செல்ல ரயில்வே மேலாளர் உறுதி

19 Feb 2026, 3:09 pm
செய்துங்கநல்லூரில் பாலக்காடு எக்ஸ்பிரஸை நிறுத்திச் செல்ல ரயில்வே மேலாளர் உறுதி
<p><strong>செய்துங்கநல்லூரில் பாலக்காடு எக்ஸ்பிரஸை நிறுத்திச் செல்ல ரயில்வே மேலாளர் உறுதி</strong></p> <p>தூத்துக்குடி, பிப்.19 &ndash; செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் பாலக்காடு எக்ஸ்பி ரஸ் ரயில் நின்று செல்ல நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மதுரை கோட்ட ரயில்வே மேலாளரி டம் பொதுமக்கள் மற்றும் நலச் சங்கத்தினர் மனு அளித்தனர். தென்னக ரயில்வேயின் மதுரை கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா, செய்துங்கநல்லூர் ரயில் நிலை யத்தில் நடைபெற்று வரும் மேம்பா ட்டுப் பணிகளை ஆய்வு செய்ய வியா ழனன்று தனி ரயில் மூலம் வருகை தந்தார். அப்போது, ரயில் நிலைய நடைமேடையை உயர்த்துதல், நீட்டி ப்பு செய்தல், பயணிகள் தண்டவா ளத்தைக் கடக்க நடை மேம்பாலம் அமைத்தல், கழிப்பறை வசதி மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி களை அவர் நேரில் பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது, &nbsp;கோட்ட மேலா ளரிடம் கோரிக்கை மனு ஒன்று அளிக் கப்பட்டது. அந்த மனுவில் கூறியி ருப்பதாவது: செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்திலிருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் மற்றும் மாணவ, மாணவியர் நெல்லை மற்றும் திருச்செந்தூர் பகுதிகளுக்குச் சென்று வருகின்ற னர். திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் இங்கு நின்று செல்கின்றன. ஆனால், &nbsp;கொரோனா காலத்திற்குப் பிறகு பாலக்காடு எக்ஸ்பிரஸ் மட்டும் இங்கு நிற்பதில்லை. கடந்த இரண்டு ஆண்டு களாக இந்த ரயிலை நிறுத்தக் கோரி பொதுமக்கள் பல்வேறு போ ராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக கனிமொழி எம்.பி., முருகன் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்தி ரன், ஊர்வசி அமிர்தராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோரிடம் பரிந்துரை கடிதங்கள் பெற்று ரயில்வே நிர்வாகத்திற்கு அனுப் பப்பட்டுள்ளன. 2023 பெருவெள்ளத்தின் போது ரயில் பயணிகளுக்கு உதவிய தாதன்குளம் மக்களுக்கு ரயில்வே நிர்வாகம் வழங்கிய ரூ.25,000 வெகுமதித் தொகையை, &ldquo;எங்க ளுக்குப் பணம் வேண்டாம், ரயிலை நிறுத்தினால் போதும்&rdquo; எனக் கூறி மாவட்ட ஆட்சியர் லெட்சுமிபதியிடம் மக்கள் திருப்பி ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது. மனுவைப் பெற்றுக்கொண்ட கோட்ட மேலாளர், இது குறித்து வணி கப் பிரிவு (Commercial) அதிகாரியி டம் கேட்டார். அந்த அதிகாரி, &ldquo;இந்த நிலையத்தில் போதிய வருமானம் இல்லை&rdquo; எனக் கூறினார். அப்போது அங்கு வந்த திருச்செந்தூர் ரயிலில் நூற்றுக்கணக்கான பயணிகள் ஏறுவதை எழுத்தாளர் முத்தாலங் குறிச்சி காமராசு அதிகாரிகளுக்குச் சுட்டிக்காட்டினார். &ldquo;தினமும் ரூ.10,000-க்கு மேல் வருமானம் வரும் இந்த நிலையத்தில் வருமானம் இல்லை எனக் கூறுவது தவறு. முதலில் ரயிலை நிறுத்துங்கள், வருமானம் வரவில்லை என்றால் ரத்து செய்யுங்கள்&rdquo; என அவர் வாதிட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மனுவை ஆய்வு செய்த கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா, செய்து ங்கநல்லூர் ரயில் நிலையத்தில் விரைவில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். சுமார் 2 மணி நேர ஆய்வுக்குப் பிறகு கோட்ட மேலாளர் அங்கிருந்து புறப் பட்டுச் சென்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.