முந்தய பக்கம்

ரயில்களில் மகளிர் பெட்டியில் ஆண்கள் பயணித்தால் ரூ.2500 அபராதம்

21 Jun 2026, 11:09 pm
ரயில்களில் மகளிர் பெட்டியில் ஆண்கள் பயணித்தால் ரூ.2500 அபராதம்
<p><strong>ரயில்களில் மகளிர் பெட்டியில் ஆண்கள் பயணித்தால் ரூ.2500 அபராதம்</strong></p><p>​​​​​​​ சென்னை: ர​யில்​களில் மகளிர் பெட்​டி​யில் ஆண்​கள் பயணித்தால் அபராதம் ரூ.500-இல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்​டுள்​ளது. புதிய விதி​முறை​கள் சனிக் கிழமை முதல் அமலுக்கு வந்​தன. ரயில்வே செயல்​பாடு​ களை வலிமைப்​படுத்​த​வும், பயணி​களின் ஒழுக்​கத்தை மேம்​படுத்​து​வும் வகை​யில், பல விதி​கள் திருத்​தப்​பட்​டுள்​ளன. அதன்​படி, ரயில்​களில் மகளிர் பெட்​டிகளில் அனு​ம​தி​யின்றி ஆண்கள் நுழைந்​தாலோ அல்​லது பயணித்​தாலோ அபராதத் தொகை ரூ.2,500 விதிக்​கப்​பட்​டுள்​ளது. முன்பு இத்​தொகை ரூ.500 ஆக இருந்தது. இது த​விர, ரயில்​களில் உரிய டிக்​கெட் இல்​லாமல் பயணிப்​போர் மீது, முன்பு ரூ.250 அப ராதம் விதிக்​கப்​பட்​டது. இத்தொகை, ரூ.500 ஆக உயர்த்​தப்​பட்​டுள்​ளது. இப்​பு​திய விதிமுறை​கள் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்​துள்​ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram