முந்தய பக்கம்

போனசை உயர்த்தக் கோரி ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

7 Oct 2026, 2:05 am
போனசை உயர்த்தக் கோரி ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

போனசை உயர்த்தக் கோரி ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வருவாய்க்கு ஏற்றவாறு போனஸ் தொகையை உயர்த்திக் வழங்க வலியுறுத்தித் தட்சண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் திருப்பத்தூர் செக்ஷன், சாமல்பட்டி, பொம்மிடி ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. திருப்பத்தூர் ரயில் நிலையம் மற்றும் ஜோலார்பேட்டை ரயில் நிலையப் பகுதிகளில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் ரவி தலைமை தாங்கினார். சேலம் கோட்டத் தலைவர் முத்துக்கிருஷ்ணன், நிர்வாகிகள் ஜெயபிரகாஷ், உமேஷ், நந்தகோபன், தவமணி, விக்னேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ரயில்வே ஊழியர்களை வஞ்சிக்கும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (திருச்சி கோட்டம்) வேலூர் கிளை சார்பாக தலைவர் எம்.சங்கரன் தலைமையில் வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கோட்ட உதவி தலைவர் கே.பலராமன், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.பரசுராமன், துணைத் தலைவர் மு.காசி,வேலூர் கிளை துணை செயலாளர் மணிகண்டன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி காட்பாடி ரயில் நிலையம் சந்திப்பில் அகில இந்திய ஸ்டேசன் மாஸ்டர் அசோசியேசன் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தட்சிண ரயில்வே பென்ஷனர்ஸ் யூனியன் மாவட்ட செயலாளர் கே.முருகானந்தம், பிரபா சந்தர் ஆகியோர் பேசினர்.

Share
FacebookXWhatsAppTelegram