ரயில்வே ஊழியர் தற்கொலை: பணிச்சுமையே காரணம்!
10 Jul 2026, 8:47 pm
<p><strong>ரயில்வே ஊழியர் தற்கொலை: பணிச்சுமையே காரணம்!</strong> </p><p>மத்திய ரயில்வே துறையில் நிலவும் கடுமையான பணிச்சுமை மற்றும் மேலதிகாரிகளின் நிர்ப்பந்தத்தால் மன உளைச்சல் காரணமாக, கிழக்கு மத்திய ரயில்வேயின் தன்பாத் பிரிவைச் சேர்ந்த தலைமை லோகோ இன்ஸ்பெக்டர் பி. சாம்பாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு இந்திய தொழிற்சங்க மையம் தனது பலத்த கண்டனத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள ரயில்வே துறையில் தற்போது சுமார் 3 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக, லோகோ ரன்னிங் பிரிவில் மட்டும் மூன்றில் ஒரு பங்கு, அதாவது சுமார் 39,000 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், தற்போதுள்ள ஊழியர்கள் விடுப்பு மற்றும் ஓய்வின்றி நாளொன்றுக்கு 14 மணி நேரம் வரை வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இத்தகைய பணிச்சுமையே ஊழியர்களின் தொடர் தற்கொலைகளுக்குக் காரணமாக அமைகிறது என்று சிஐடியு சுட்டிக்காட்டியுள்ளது. மறைந்த சாம்பாயின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள சிஐடியு பொதுச்செயலாளர் எளமரம் கரீம், இத்தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார். </p>
