தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பணியிட மாற்றம் கோரி பல ஆண்டுகளாக காத்திருப்பு! ரயில் ஓட்டுநர்கள் குடும்பத்தினருடன் தர்ணா

yesterday
பணியிட மாற்றம் கோரி பல ஆண்டுகளாக காத்திருப்பு! ரயில் ஓட்டுநர்கள் குடும்பத்தினருடன் தர்ணா
<p><strong>பணியிட மாற்றம் கோரி பல ஆண்டுகளாக காத்திருப்பு! ரயில் ஓட்டுநர்கள் குடும்பத்தினருடன் தர்ணா</strong></p><p>ஈரோடு, ஜூலை 15- பணியிட மாற்றம் கோரி விண் ணப்பத்தும், நிர்வாகத்தின் கால தாமதத்தால் பல ஆண்டுகளாக காத்திருப்பதாக குற்றஞ்சாட்டி, ரயில் ஓட்டுநர்கள் தங்களது குடும் பத்தினருடன் தர்ணாவில் ஈடுபட்ட னர். தென்னக ரயில்வே-யின் சேலம் கோட்டத்தில், கோட்டங்கள் மற்றும் ரயில்வேகளுக்கு பணியிட மாற்றம் கோரி விண்ணப்பித்துள்ள நூற்றுக் கணக்கான ரயில் ஓட்டுநர்கள், பல ஆண்டுகளாக நிர்வாகத்தின் கால தாமதத்தால் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் அவர்களது பணிமூப்பு, பதவி உயர்வு வாய்ப்பு கள் மற்றும் குடும்ப வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், தீவிர மருத்துவப் பிரச் சனைகளால் அவதிப்படும் ஊழி யர்களுக்குக்கூட மனிதாபிமான அடிப்படையில் நிவாரணம் வழங்கப்படவில்லை. எனவே, மூப்பு அடிப்படையில் அனைத்து தகுதியுள்ள ஊழியர்களையும் உட னடியாக பணியிட மாறுதலில் விடு விக்க வேண்டும். நிலுவையில் உள்ள அனைத்து விண்ணப்பங் களையும் உடனடியாக பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண் டும். காலாவதியான டிரான்ஸ்பருக் கான தடையில்லா சான்றிதழ்களை புதுப்பிக்கவோ அல்லது செல்லு படியாகக்கருதி மாற்ற உத்தரவு வழங்க வேண்டும். தீவிர மருத் துவப் பிரச்சனைகளால் பாதிக்கப் பட்ட ஊழியர்களுக்கு மனிதாபி மான அடிப்படையில் உடனடி மாற் றம் வழங்க வேண்டும். நிர்வாக தாம தத்தால் பாதிக்கப்பட்ட சேலம் கோட்ட ஊழியர்களின் மூப்பு மற் றும் மாற்ற முன்னுரிமையை பாது காக்க வேண்டும் போன்ற கோரிக் கைகளுக்காக பலமுறை மனுக் கள், பேச்சுவார்த்தைகள் மற்றும் கோரிக்கைகள் வைத்தும் தீர்வு கிடைக்காததால், பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தங்களது குடும்பத் தினருடன் தர்ணாவில் ஈடுபட்டனர். அனைத்து இந்திய லோகோ ரன்னிங் ஸ்டாப் அசோசியேசன் சேலம் கோட்டத்தின் சார்பில், புத னன்று மாலை ஈரோடு ரயில் நிலை யம் முன்பு தர்ணா நடைபெற்றது. இதில், சங்கத்தின் கோட்டத் தலை வர் சீனிவாச பட் தலைமை வகித் தார். டிஆர்இயு தென் மண்டல துணை ஒருங்கிணைப்பாளர் கே. பிஜூ தர்ணாவை தொடங்கி வைத் தார். சங்கத்தின் கோட்டச் செயலா ளர் அருண்குமார் சிறப்புரையாற்றி னார். ஒருங்கிணைப்புக்குழு தலை வர் பி.எஸ்.ஜி.பிரகாஷ் வாழ்த்திப் பேசினார். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் போராட் டத்தில் பங்கேற்றனர். </p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.