தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு கிடைக்க ரயில்வே நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் கருத்தரங்கில் அ.சவுந்தரராசன் வலியுறுத்தல்

30 Sept 2026, 12:15 am
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு கிடைக்க  ரயில்வே நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் கருத்தரங்கில் அ.சவுந்தரராசன் வலியுறுத்தல்

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு கிடைக்க ரயில்வே நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் கருத்தரங்கில் அ.சவுந்தரராசன் வலியுறுத்தல்

சென்னை, செப். 29-சம வேலைக்கு சமஊதியம், பிஎப், இஎஸ்ஐ, போனஸ் கேட்டு ரயில்வேகான்ட்ராக்ட் லேபர் யூனியன்களின் தேசிய கருத்தரங்கம் செப்டம்பர் 28, 29 தேதிகளில் சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு சிஐடியு அகிலஇந்திய துணைத் தலை வர் அ.சவுந்தரராசன் பேசு கையில், ஆயிரக்கணக்கான நிரந்தரமற்ற தொழி லாளர்கள், எந்த தொழிற்சங்க தலைமையும் இல்லாமல் ஆங்காங்கே வேலை நிறுத்தம் உள்ளிட்டதீவிரமான போராட்டங் களை நடத்தி வருகிறார்கள். சென்னையில் பன்னாட்டு மின்னணு உற்பத்தி நிறு வனங்களில் குறைந்த ஊதி யம், கட்டற்ற சுரண்டல்,அடக்குமுறைகளை எதிர்த்து ஒரே இரவில் ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் தன்னெ ழுச்சியாக திரண்டு பிரதானசாலையை மறித்து போராட்டம் நடத்தி நிர்வாகத்தையும், அரசாங்கத்தையும் பணிய வைத்து தங்க ளுடைய கோரிக்கைகளை நிறை வேற்றிக் கொண்டார்கள்.

சிஐடியு போன்ற சங்கங்கள் நிரந்தர தொழி லாளர்களையும், ஒப்பந்த தொழிலாளர்களையும் சங்கமாக அமைப்பாக்கி ஒன்று திரட்டி தொடர் போராட்டங்களை முன்னெடுத்தால்தான் முத லாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் அரசின் கொள்கையை பின்னுக்குத் தள்ள முடியும். எனவே சாதி, மதம், இனம், மொழி

கடந்து ஒன்றுபட்ட போராட்டத்தை நிரந்தரத் தொழிலாளர்களும், ஒப்பந்த தொழிலாளர்களும் வருங்காலத்தில் இணைந்து முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதில் ஒருங்கி ணைப்பாளராக ரமேஷ்பாபு உள்ளிட்ட 28 பேர் கொண்ட

புதிய தேசிய ஒருங்கி ணைப்பு குழு தேர்வு செய்யப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் இருந்து அ.ஜானகிராமன், ஆர்.சரவணன், பா.ராஜாராமன், என்.வி.கிருஷ்ணராவ், டி.சந்திரோதயம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தீர்மானங்கள்

ரயில்வேயில் ஒப்பந்த முறையை ஒழித்து, நிரந்தரத் தன்மை கொண்ட பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர் விரோத 4 புதிய தொழிலாளர்சட்டத் தொகுப்புகளைக் கைவிட வேண்டும். தொழிலாளர் சட்டங்களை ஏய்க்கும், மீறும் ஒப்பந்ததாரர்களைகருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும். முதன்மை முதலாளியாக, தொழிலாளர் இழப்பீடு, மகப்பேறு உதவி,வைப்பு நிதி, இ.எஸ்.ஐ, போனஸ் உள்ளிட்ட அனைத்து சமூக பாதுகாப்பு பலன்களும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு கிடைப் பதை ரயில்வே நிர்வாகம்உறுதி செய்ய வேண்டும்உள்ளிட்ட பல்வேறு தீர்மான ங்கள் நிறைவேற்றப்பட்டன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.