விம்கோ ரயில் நிலையம் செல்லும் வழியை அடைத்த ரயில்வே நிர்வாகம் தடுத்து நிறுத்திய சிபிஎம் கவுன்சிலர்
24 May 2026, 2:38 am

விம்கோ ரயில் நிலையம் செல்லும் வழியை அடைத்த ரயில்வே நிர்வாகம் தடுத்து நிறுத்திய சிபிஎம் கவுன்சிலர்

சென்னை, மே 23- திருவொற்றியூர் 4ஆவது வார்டுக்கு உட்பட்ட பாலாஜி நகர் வழியாக விம்கோ ரயில் நிலையம் செல்லும் பொது வழியை ரயில்வே நிர்வாகம் அடைத்தது .

கடந்த 60 ஆண்டு களுக்கும் மேலாக எர்ணாவூர், மகாலட்சுமி நகர், முல்லை நகர், பாலாஜி நகர், காமராஜ் நகர், பிருந்தாவன் நகர் போன்ற நகர்களில் வசிக்கும் மக்கள் இந்த வழியாகத்தான் விம்கோ ரயில் நிலையம் செல்வார்கள். இந்நிலையில் இந்த பொது வழியை திடீரென ரயில்வே நிர்வாகம் அடைத்தது.

இதைக் கண்டித்து மாமன்ற உறுப்பி னர் ஆர்.ஜெயராமன் தலைமையில் அனைத்து கிராம நிர்வாகிகள், பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு ரயில்வே அதிகாரி, இருப்புப்பாதை பொறு ப்பான அதிகாரி ஆகியோர் வந்து பொதுமக்களிடம் பேச்சு நடத்தினார்.

சுமார் 60 ஆண்டு காலமாக பொதுமக்கள் பயன் படுத்தும் இந்த பாதையை அடைக்கக் கூடாது என்றும், ரயில் நிலையத்திற்கு செல்ல இந்த ஒரு வழிதான் உள்ளது என்றும் மாமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இதையடுத்து பொதுமக்கள் இருப்பு பாதையை கடக்கா மல் இருப்பதற்கு தடுப்புகள் அமைக்கும் நடவடிக்கை எடுப்ப தாகவும், பொதுமக்கள் பயன்படுத்தும் இந்த சாலையை தடுக்க மாட்டோம் என அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர் .

அப்போது அதிகாரி கூறுகையில், இருப்புப் பாதையை கடப்பதற்கு பொதுமக்கள் நடந்து செல்லும் போது ரயிலில் அடிபட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுப்பதற்காகவே இது போன்ற நடவடிக்கை எடுப்பதாகவும், ஊழியர்கள் தெரியா மல் சாலையை அடைத்து விட்டார்கள் என்று தெரிவித்தார்.

அப்போது மாமன்ற உறுப்பினர் பொது பாதைக்கு இடை யூறு இல்லாமல், ரயில்வே இருப்புப் பாதையை பொது மக்கள் கடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கையை மேற் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார் இதில் பிருந்தாவன் நகர் தலைவர் ஆறுமுகம், திமுக வட்டச் செயலாளர் ராம்குமார், நிர்வாகி சோமு, சிபிஎம் நிர்வாகி கே.வெங்கடையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.