தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரயில்வேயில் 3 லட்சம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரிக்கை டிஆர்இயு 8 மையங்களில் உண்ணாநிலைப் போராட்டம்!

19 May 2026, 8:50 pm
ரயில்வேயில் 3 லட்சம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரிக்கை டிஆர்இயு 8 மையங்களில் உண்ணாநிலைப் போராட்டம்!

ரயில்வேயில் 3 லட்சம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரிக்கை டிஆர்இயு 8 மையங்களில் உண்ணாநிலைப் போராட்டம்!

சென்னை, மே 19 - ரயில்வேயில் காலியாக உள்ள பணி யிடங்களை நிரப்ப வேண்டும்; ரயில் வேக்கு இடையேயான இடமாற்றத்திற்கு பதிவு செய்தவர்களுக்கு அவர்களின் சொந்த ஊருக்கே மாற்றல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தட்சிண ரயில்வே ஊழியர்கள் சங்கம் (டிஆர்இயு) சார்பில் பெரம்பூர் கேரேஜ், சென்னை மூர் மார்க்கெட் வளாகம் உள்பட 8 மையங்களில் செவ்வாயன்று (மே 19) உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது.

ரயில்வே துறையில் உள்ள சுமார் 3 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

தெற்கு ரயில்வேயிலிருந்து பிற ரயில்வேக்கள், கோட்டங்களுக்கு இடையே பணி மாறுதல் பெற உள்ள நிபந்தனையை திரும்பப் பெற வேண்டும்; இடமாறுதல் ஆணை பெற்ற தொழி லாளர்களை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தியும் இந்த போராட்டம் நடை பெற்றது. சென்னை மூர்மார்க்கெட் வளாகத் தில் நடைபெற்ற போராட்டத்தில் செயல் தலைவர் அ. ஜானகிராமன், தலைவர் ஜி. சுகுமாறன், பொதுச்செயலாளர் பேபி ஷகிலா, நிர்வாகிகள் ஆர். இளங்கோவன், வி. அரிலால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். தாம்ப ரத்தில் நடைபெற்ற போராட்டத்தை சிஐ டியு மாநில பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன், சென்னை மூர்மார்க்கெட் வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தை சிஐடியு மூத்த தலைவர் ஏ.கே. பத்ம நாபன் ஆகியோர் துவக்கி வைத்தனர். ​​​​​​​சிஐடியு மாநிலத் தலைவர் ஜி. சுகுமாறன் சிறப்புரையாற்றினார். இந்த போராட்டம் குறித்து டிஆர்இயு செயல் தலைவர் அ. ஜானகி ராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ரயில்வேக்கு இடையேயான இடமாற்றத் திற்கு பதிவு செய்திருக்கக் கூடிய வடமாநிலத் தொழிலாளர்களில்- மற்ற ரயில்வே மண்ட லங்களில் இருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற்றவர்களை- தெற்கு ரயில்வேயில் இருந்து விடுவித்து, அவர்கள் சொந்த ஊருக்கு மாற்றலாகி செல்ல உத்தரவு வழங்க வேண்டும், அதேபோல் கேரளப் பகுதியைச் சேர்ந்த ரயில்வேக்கு இடையேயான இட மாற்றத்திற்கு பதிவு செய்திருக்கக் கூடிய தொழி லாளர்களுக்கும் மாற்றல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஒர்க் ஷாப் டிவிஷன் மற்றும் சென்னை டிவிஷன் சார்பில் 8 இடங்களில் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. தெற்கு ரயில்வேயில் 14 ஆயிரம் காலிப்பணியிடங்கள் தெற்கு ரயில்வேயில் உள்ள 14,000 காலிப் பணியிடங்களை நிரப்பினால்தான் இவர்களை விடுவிக்க முடியும் என்று கூறுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. ரயில்வே வாரியம், ரயில்வே அமைச்சகம் ஒரு புதிய உத்தரவை வெளியிட்டிருக்கிறது. அதாவது பாதுகாப்பு பிரிவில் 90 சதவிகிதத்திற்கு ஆட்கள் இருந்தால் மட்டுமே ரயில்வேக்கு இடையேயான இடமாற்றத்திற்காக பதிவு செய்தவர்களை விடுவிக்க முடியும் என்று கூறுகிறது. அப்படி பார்த்தால் ரயில்வேயின் எந்தத் துறையிலும் 90 சதவிகிதத்திற்கு ஆட்கள் இருக்க மாட்டார்கள். இதனால் இடமாற்றம் என்பதே இல்லாத சூழ்நிலை ஏற்படும். எல்லா இடங்களிலும் கோட்டத்திற்கு இடையிலேயும் ரயில்வே மண்டலங்களுக்கு இடையிலேயும் இடமாற்றம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இடமாற்றத்திற்கு பணம் கேட்கப்படுகிறது. அல்லது பாஜகவின் உயர் அமைச்சர்கள், எம்.பி.க்கள் கூறினால் பொது மேலாளர் தலையிட்டு விடுவிக்கிறார். மன அழுத்தத்தால் ஊழியர்கள் தற்கொலை தெற்கு ரயில்வே அதிகாரிகளைப் பொறுத்தவரை இந்த தொழிலாளர்களுக்கு இடமாற்றம் தர வேண்டும் என்ற சிந்தனையே இல்லை. 15 வருடங்களுக்கும் மேலாக தொழிலாளர்கள் இங்கே பணிபுரிகிறார்கள். ஆனால் அவர்களது குடும்பத்தினர் உ.பி., ராஜஸ்தான், பீகார், ஒடிசா, குஜராத், மேற்கு வங்கம் என பல்வேறு இடங்களில் வசிக்கிறார்கள். இதனால் இரட்டிப்பு செலவு ஏற்படுகிறது. பல வடமாநிலத் தொழிலாளர்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அந்தளவிற்கு நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது. எனவே, தெற்கு ரயில்வே பொது மேலாளர் உடனடியாக தலையிட்டு அவர்களை விடுவிக்க வேண்டும். தெற்கு ரயில்வேயில் உள்ள காலிப் பணியிடங்களை ரயில்வே வாரியம் உடனடியாக நிரப்ப வேண்டும். இந்திய ரயில்வே முழுவதும் 30 ஆயிரம் காலிப் பணியிடங்களை சரண்டர் செய்ய முடி வெடுத்திருப்பதை கைவிட வேண்டும். இவ்வாறு அ. ஜானகி ராமன் கேட்டுக் கொண்டார். இதேபோன்று தாம்பரம், பொன்னேரி நாயுடுபேட்டை, ஜோலார்பேட்டை காட்பாடி, அரக்கோணம், ஆவடி, பொன்மலை, போத்தனூர் ஆகிய இடங்களிலும் உண்ணா நிலைப் போராட்டம் நடைபெற்றது. தாம்பரம் தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்தை சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் எஸ். கண்ணன் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “ரயில்வேயில் 2 ஆயிரம் பணியிடங்களுக்கு 8 லட்சம் பேர் விண்ணப்பிக்கும் அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவேன் என்ற வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்றி இருந்தால் 24 கோடி பேருக்கு வேலை கிடைத்திருக்கும். வேலையின்மை பெருமளவு குறைந்திருக்கும். இதற்கு மாறாக, ரயில்வேத்துறையை தனியார்மயமாக்கி வருகின்றனர்” என்றார். பணிச்சுமையால் விடுமுறை கூட இல்லை “ஒரு அலுவலகத்தில் 10 சதவிகிதத்திற்கும் குறைவாக காலிப்பணியிடம் இருந்தால் மட்டுமே ஊழியர்களுக்கு பணியிடமாறுதல் வழங்கப்படும் என்று விதி வைத்துள்ளனர். ஆனால் 30 சதவிகிதத்திற்கு மேல் காலிப்பணியிடங்கள் உள்ளன. இதனால் பணிச்சுமை அதிகமாகி, ஊழியர்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட விடுமுறை யைக் கூட எடுக்க முடிவதில்லை. மொழித்திணிப்பு இந்தி மொழி பேசும் ஊழியர்களை அதிகளவில் தமிழகத்தில் பணியமர்த்தி மொழித்திணிப்பை ஒன்றிய அரசு செய்கிறது. சொந்த மாநிலங்களுக்கு பணியிடமாறுதல் கோரும் வெளிமாநில ஊழியர்களுக்கு பணி மாறுதல் வழங்க வேண்டும். ஆண்டுதோறும் 30 ஆயிரம் பணியிடங்களை அழிக்கும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், அங்கீகரிக்கப்பட்ட டிஆர்இயு சங்கத்து டன் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த வேண் டும்” என்றும் எஸ். கண்ணன் வலியுறுத்தினார். கோட்ட உதவிச் செயலாளர் பி. சுதர்சன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செந்தில்குமார், டிஆர்இயு உதவிப் பொதுச்செயலாளர் எஸ். அருண்குமார் செழியன், கிளைத் தலைவர் க. ஆறுமுகம், கிளைச் செயலாளர்கள் ஜெய ராஜ் முறியட், ரமேஷ், செல்வக்குமார் உள்ளிட்டு பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் பேசினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.