கடலூர்- புதுச்சேரி ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த கோரி ரயில் மறியல் போராட்டம்
16 Feb 2026, 2:37 pm
<p><strong>கடலூர்- புதுச்சேரி ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த கோரி ரயில் மறியல் போராட்டம்</strong></p>
<p>கடலூர், பிப்.16- ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டில் தமிழ கத்திற்கான திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதை கண்டித்து திருப்பா திரிபுலியுரில் மறியல் போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் -தஞ்சாவூர் இரட்டை பாதை, கடலூர்- பாண்டி- திண்டிவனம் இருப்பு பாதை திட்டத்திற்கும், பாண்டி - மகாபலிபுரம்- சென்னை திட்டத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யாத வெற்று பட்ஜெட்டை கண்டித்தும், கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றுக் கொண்டி ருப்பதை விரைவு படுத்த வேண்டும். கடலூர் திருப்பாப்புலியூர் என ரயில் நிலையத்திற்கு பெயர் மாற்றம் செய்ய வேண்டும், மயிலாடுதுறை- கோவை ரயிலை கட லூர் துறைமுகம் வரை நீட்டிக்க வேண்டும், பாண்டி- மங்களூர், பாண்டி- எஸ்வந்த்பூர் ரயில்களை கடலூர் வழியாக இயக்க வேண்டும். தினசரி காலை, மாலை சென்னை சென்று வர கடலூர் துறைமுகத்தில் இருந்து காலை 5 மணிக்குள், மாலை 6 மணிக்கு சென்னையில் இருந்தும் ரயில் இயக்க நட வடிக்கை எடுக்க வேண்டும், கடலூர் துறைமுகம் விருதாச்சலம் வழியாக கோவைக்கு புதிய ரயில் இயக்க வேண்டும்.கொரோனாவுக்கு முன்பாக திருப்பாதிரிப்புலியூரில் நின்று சென்ற அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி திருப்பாப்புலியூரில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சென்னையி லிருந்து திருச்சி செல்லும் சோழன் ரயில்வே சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் தலைமை தாங்கினார். மறியல் போராட்டத்தில் திமுக முன்னாள் எம்எல்ஏ இள.புகழேந்தி, கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் விஷ்ணு பிரசாத், காங்கிரஸ் மாவட்ட தலை வர் ரங்கமணி, விடுதலை சிறுத்தை கட்சி மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் திருமார்பன், மண்டல செயலாளர் பரசு.முருகையன், மாவட்ட செய லாளர் கலை.மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செய லாளர் ஆர்.அமர்நாத், செயற்கு உறுப்பினர் ராஜேஷ் கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.கே.பக்கீரான், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் பி. துரை, வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் குளோப், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் லெனின், அருள் பாபு, திராவிட கழக மாவட்ட செய லாளர் எழிலேந்தி, நகர செயலாளர் தருமன், குடி யிருப்போர் சங்கம் சிறப்பு தலைவர் எம்.மருவாணன், பொதுச் செயலாளர் பி.வெங்கடேசன், மக்கள் அதிகார கழகம் ராம லிங்கம், மதிமுக ஜெய் சங்கர், கடலூர் பொதுநல அமைப்பு ரவி, சுப்பராயன், குரு ராமலிங்கம் உள்ளிட் டோர் ரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டார். போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.</p>
