வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி ஜிண்டால் நிறுவனத்தின் நிலக்கரித் திட்டத்திற்கு எதிராக ஒருங்கிணைந்த கிளர்ச்சி!
13 May 2026, 9:24 pm

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி ஜிண்டால் நிறுவனத்தின் நிலக்கரித் திட்டத்திற்கு எதிராக ஒருங்கிணைந்த கிளர்ச்சி!

வேலைநிறுத்தம் 13

ராய்கர், மே 13- சத்தீஸ்கர் மாநிலத்தின் கலாச்சாரத் தலைநகராகவும், கதக் நடனத்தின் ‘ராய்கர் கரானா’ பாணிக்கு புகழ்பெற்ற இட மாகவும் விளங்கும் ராய்கர் மாவட்டம், இன்று கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் (JSPL) நிறுவனத்தின் நிலக்கரி சுரங்க விரிவாக்கத் திட்டத்திற்காக ஆதிவாசி மக்களின் நிலங்களைப் பறிக்கும் முயற்சி களுக்கு எதிராக, விவசாயிகளும் தொழி லாளர்களும் இணைந்து நடத்தி வரும் வீரஞ்செறிந்த போராட்டங்களை இந்தப் பகுதியில் காண்போம்.

“எங்கள் நிலத்தை உயிருக்கு நிகராகக் கருதுகிறோம்; அதனை ஒருபோதும் கார்ப்ப ரேட் நிறுவனங்களுக்குத் தர மாட்டோம்” - இது ராய்கர் மாவட்டத்தின் தம்னார் பகுதி கிராம மக்களின் ஒற்றை முழக்கமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. கடந்த டிசம்பர் 2025-இல் தொடங்கிய இந்தப் போரா ட்டம், தற்போது தொழிலாளர் எழுச்சி யுடன் இணைந்து ஒரு மாபெரும் சமூக- பொருளாதாரக் கிளர்ச்சியாக உரு வெடுத்துள்ளது.

அமைதிப் போராட்டமும் - காவல்துறையின் அடக்குமுறையும்

கரே பெல்மா (Gare Pelma) நிலக்கரித் தொகுதியின் விரிவாக்கத்திற்காக 14 கிராம ங்களைச் சேர்ந்த ஆதிவாசி மக்களும் விவசாயிகளும் டிசம்பர் 12 முதல் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். டிசம்பர் 27 அன்று போராட்டத்தை ஒடுக்கக் காவல் துறை முயன்றபோது, அது பெரும் வன்முறையாக வெடித்தது.

• மக்களின் ஆவேசம்: சுமார் 1,000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு காவல் துறையின் தடுப்புகளைத் தகர்த்தனர். நிலக்கரி கையாளும் இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டன.

• கருத்துக் கேட்புக் கூட்ட நாடகம்: டிசம்பர் 8 அன்று நடைபெற்ற பொதுக் கருத்துக் கேட்புக் கூட்டம் முறையாக நடத்தப்பட வில்லை என்றும், மக்களின் உண்மை யான ஒப்புதல் இன்றித் திட்டம் திணிக்கப் படுவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். விவசாயி - தொழிலாளர் வர்க்கத்தின் ஒருங்கிணைந்த எழுச்சி ராய்கர் போராட்டம் வெறும் நில உரிமைக் கானது மட்டுமல்ல; அது உழைப்புச் சுரண்டலுக்கு எதிரான போராட்டமா கவும் மாறியுள்ளது.

• 12 மணி நேர வேலை: ஜிண்டால் ஆலை களில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழி லாளர்கள் 12 மணி நேரக் கட்டாய வேலை மற்றும் குறைந்த ஊதி யத்திற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி யுள்ளனர்.

• பாதுகாப்பற்ற சூழல்: பிப்ரவரி 2026-இல் ஒரு கார்பன் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 மாதக் குழந்தை உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர். ஒரு தொழிற்சாலை க்குள் கைக்குழந்தை எப்படி அனு மதிக்கப்பட்டது என்பது நிர்வாகத்தின் பாதுகாப்பு அலட்சியத்தைத் தோலு ரித்துக் காட்டியுள்ளது.

• தொழிலாளி பலி: ஏப்ரல் 2025-இல் கரே பெல்மா சுரங்கத்தில் பிளாஸ்ட் பர்னஸ் (Blast Furnace) வெடிப்பில் சிக்கி உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விஜய் பகதூர் என்ற தொழிலாளி 1,500°C வெப்பத்தில் கருகி உயிரிழந்தார். இத்த கைய விபத்துகள் தொடர்கதையாகி வருவது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களின் தற்காலிக வெற்றி

தொடர் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் ஜிண்டால் நிறு வனம் சற்று பின்வாங்கியுள்ளன. டிசம்பர் 29 அன்று, கரே பெல்மா நிலக்கரித் திட்டத் திற்கான விண்ணப்பத்தை நிறுவனம் தற்காலிகமாகத் திரும்பப் பெற்றுள்ளது. 18 நாட்களாகத் தொடர் தர்ணா நடத்திய 14 கிராம மக்களுக்கு இது ஒரு பகுதியளவு வெற்றியாகக் கருதப்படுகிறது.

ஜிண்டால் ஆலையின் பின்னணி

1989-இல் தொடங்கப்பட்ட ஜிண்டால் நிறுவனத்தின் ராய்கர் ஆலை, உலகின் மிகப்பெரிய நிலக்கரி சார்ந்த ஸ்பாஞ்ச் இரும்பு (Sponge Iron) தயாரிப்பு நிலையமாகும். தற்போது இதன் உற்பத்தித் திறனை ஆண்டுக்கு 20 லட்சம் டன்னாக உயர்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 3,020 ஹெக்டேர் நிலங்களைக் கையகப்படுத்த முயற்சிப்பதாலேயே இந்தப் போராட்டங்கள் வெடித்துள்ளன. நில உரிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு ஆகிய அடிப்படை அம்சங்களில் தீர்வு காணப்படா மல், இத்தகைய திட்டங்கள் மீண்டும் மீண்டும் திணிக்கப்பட்டால் ராய்கர் போன்ற கனிம வளம் மிக்க பகுதிகளில் போராட்டக் கனல் ஓயாது என்பதையே தற்போதைய நிகழ்வுகள் காட்டுகின்றன. லெப்ட் வியூஸ்