தீக்கதிர் முக்கிய செய்திகள்
5 Oct 2026, 8:25 pm

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையின் போது படிவம் 6-ஐ தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மாற்றியுள்ளார் என்பது உச்சநீதிமன்றத்தின் மூலம் உறுதியாகியுள்ளது. பாஜகவுக்கு உதவுவதற்காக தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் ஞானேஷ்குமார். ஜனநாயகப் படுகொலைக்குக் காரணமான அனைவரும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான்

கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமையைப் பறித்து, அவர்களைச் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்றும் எந்தவொரு தன்னிச்சையான நடவடிக்கையும் நமது அரசியலமைப்பின் ஆன்மாவையே தாக்குவதாகவே அமையும்.

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்படுவதும், வாக்குரிமை நீர்த்துப்போகச் செய்யப்படுவதும் மக்களாட்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்; இந்த விவகாரம் குறித்து மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் துணிச்சலாகக் குரல் கொடுக்க வேண்டும்.

சி.ஜே.பி செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ்

என்னையும், அபிஜீத் திப்கே, அசுதோஷ் ரங்கா மற்றும் பிற சி.ஜே.பி தலைவர்களையும் அக். 10 போராட்டத்திற்கு முன்னதாக காவல்துறை கைது செய்யலாம். இத்தகைய சர்வாதிகார நடவடிக்கைகள் பலனளிக்கும் என்று ஒன்றிய அரசு நினைத்தால், அது தவறு. சிறைவாசத்திற்கு நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம்.