சாவர்க்கர் வழக்கு ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு
14 Aug 2026, 9:08 pm

சாவர்க்கர் வழக்கு ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு

கடந்த 2022 நவம்பர் 17 அன்று‘பாரத் ஜோடோ யாத்திரை’யின் போது, சாவர்க்கர் பிரிட்டிசாருடன் இணைந்து செயல்பட்டதாகவும், பிரிட்டிசாரிடம் ஓய்வூதியம் பெற்றதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி விமர்சித்திருந்தார்.இதனை எதிர்த்து பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் ராகுல் காந்தி மீது 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், ராகுல் காந்தி இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் (லக்னோமாவட்ட நீதிமன்றம், அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக) செய்தார். வெள்ளியன்று இந்த மனுவிசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஷீல் நாகு அடங்கிய அமர்வு,”ராகுல்காந்திக்கு எதிரான கிரிமினல் நடவடிக்கைகளுக்குச் சட்டப்படி பெறப்பட வேண்டிய உரிய முன் அனுமதி பெறப்படவில்லை. எதிர்தரப்பான உத்தரப்பிரதேசமாநிலம் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், அனுமதி வழங்கப்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை. இதனால் இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது” எனதீர்ப்பு வழங்கி, வழக்கை முடித்துவைத்தது.