தீக்கதிர் முக்கிய செய்திகள்
30 May 2026, 8:52 pm

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

நீட், சிபிஎஸ்இ, எஸ்எஸ்சி, கியூட் என நான்கு தேர்வுகளையும், ஒரு கோடி மாணவர்களின் எதிர்காலத்தையும் மோடி அரசு நேர்மையாகக் கையாளவில்லை. மோடி ஆட்சியில் கல்வி முறை கடுமையாகச் சேதமடைந்துள்ளது. இதற்குக் காரணமானவர்களை இளைய தலைமுறை நிச்சயம் பொறுப்பேற்கச் செய்யும்.

தேசியவாத காங்கிரஸ் (சரத்) எம்எல்ஏ ரோகித் பவார்

மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு செயலற்று உள்ளது. மாநிலத் தில் சட்டவிரோத தொழிலுக்கும், காவல்துறைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதனால்தான் சட்டவிரோத மதுபானத் தால் புனேயில் பலர் இறந்துள்ளனர். பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம். மறுபக்கம் கள்ளச்சாராய மரணங்கள், மாரடைப்பு அல்லது பிற காரணங்களால் நிகழ்ந்தவை என்று கூறி, காவல்துறை மூடி மறைக்க முயற்சிக்கிறது.

திரிணாமுல் எம்.பி., மஹுவா மொய்த்ரா

வினாத்தாள்களைக் கொண்டு செல்வதற்காக மோடி அரசு விமானப்படையை பயன்படுத்த உள்ளது. அதே நேரத்தில், கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு விமானமும் வழங்கப்படாத தால் புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

முன்னாள் ஒன்றிய அரசு அதிகாரி ஆஷிஷ் ஜோஷி

தங்களின் வெறுப்புப் பரப்புரையாளர்களைக் கேள்வி கேட்கும் எவரையும், குறிப்பாக நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் இந்திய விளையாட்டு வீரர்களாகவே இருந்தா லும் சரி, இந்துத்துவா ஆதரவாளர்கள் கொடூரமாகக் குறி வைக்கிறார்கள். அவர்களுக்கு இந்தியாவைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. அவர்களின் ஒரே விசுவாசம் நோய் ்வாய்ப்பட்ட இந்துத்துவா மீதானதே தவிர, நாட்டின் மீது அல்ல.