முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

15 Jun 2026, 2:01 am
தீக்கதிர் முக்கிய செய்திகள்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

கீழ்ப்படியும் பணியாளரைப்போல அமெரிக்காவின் உத்தரவுகளுக்கு மோடி அடிபணிகிறார். சமரசம் செய்துகொண்ட பிரதமர் ஆட்சியில் இந்தியராக இருப்பது அழிவுக்குரியதாகிவிட்டது. வெளிநாட்டு சக்திகள் நம் மக்களை கொல்கின்றன; அரசோ அவர்கள் உத்தரவுக்கு பணிந்துபோகிறது.

ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்

இந்தியாவிற்குள் நுழையும் போதைப்பொருட்களின் முக்கிய நுழைவாயிலாக குஜராத் மாநிலம் மாறுவதற்கு பாஜக அரசு அனுமதித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்திற்கு வரும் போதைப்பொருட்களில் 70 சதவீதம் குஜராத் மாநிலத்திலிருந்துதான் வருகின்றன.

அரசியல் விமர்சகர் சங்கமித்ரா பந்தோபாத்யாய்

மேற்கு வங்கத்தில் பல தொகுதிகளைச் சேர்ந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எப்படி எரிந்து சாம்பலாகின என்று யாருமே கேள்வி எழுப்பவில்லை. எந்த ஊடகங்களும் விவாதிக்கவில்லை. திரிணாமுல் கூட இதுகுறித்து மௌனம் காக்கிறது. இது சாதாரண பிரச்சனை அல்ல. மக்களின் தீர்ப்பு (வாக்குகள்) அழிக்கப்பட்டதுதான் உண்மையான பிரச்சனை.

நாட்டுப்புறப் பாடகி நேகா சிங் ரத்தோர்

4,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எரிக்கப்படுவதாக இருக்கட்டும் ;கல்வி அமைச்சகத்தில் ஏற்படும் தீ விபத்தாக இருக்கட்டும், இந்த நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை மக்கள் மிகத் தெளிவாகவே புரிந்து வைத்துள்ளனர். எனது பார்வையில், ஒட்டுமொத்த நாடும் ஒரு பெரும் ஊழலுக்குச் சாட்சியாக மாறியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram