முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

24 Jul 2026, 9:01 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

தில்லி ஜந்தர் மந்தரில் அனுமதியின்றி நடைபெறும் போராட்டங்களில் பங்கேற்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர்களை தில்லி பல்கலைக்கழகம் மிரட்டியுள்ளது. தில்லி பல்கலைக்கழக நிர்வாகிகளே! ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். காலம் வரும்போது இதற்கெல்லாம் நீங்கதான் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி

மாணவர்கள் மீது தில்லி காவல்துறை நடத்திய கொடூரமான அடக்குமுறையை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக, ஒன்றிய அரசு கல்வி அமைச்சரைப் பாதுகாக்க ஏன் இவ்வளவு முனைப்பு காட்டுகிறது? ஒட்டுமொத்த தேசமும் நமது மாணவர்கள், இளைஞர்களுடன் உறுதியாக நிற்கிறது. யாராலும் அவர்களை ஒடுக்க முடியாது.

கரப்பான்பூச்சி கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே

சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை நிறுத்திக்கொண்டதால் நிம்மதி அடைகிறோம். ஆனால் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை அமைதி போராட்டம் தொடரும்.

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்

வியாழனன்று இரவு 12 மணிக்கு வினாத்தாள் கசிவு தொடர்பாக விரைவு நீதிமன்றங்களை அமைக்கும் சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் கூறுகிறார். ஆனால் 2024 நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் நபர் வியாழனன்று நீதிமன்றத்தில் சிபிஐயால் நிரபராதி என அறிவிக்கப்பட்டார்; மோடியின் நோக்கமே ஒரு குறைபாடாகத்தான் உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram