தீக்கதிர் முக்கிய செய்திகள்
20 Jul 2026, 9:36 pm

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

மோடி இந்தியாவின் பிரதமர் அல்ல. அவர் இளைஞர்களுக்கு எதிரான பிரதமர். வினாத்தாள்களை கசியவிட்ட குற்றவாளிகள் சுதந்திரமாகத் திரிகிறார்கள். ஆனால் நியாயமான கேள்விகளை எழுப்பும் மாணவர்கள் இழுத்துச் செல்லப்பட்டு, தாக்கப்படுகிறார்கள்.

சமாஜ்வாதி எம்.பி., டிம்பிள்

தில்லியில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறை கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. மாணவர்களை குற்றவாளிகளைப் போல நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் சிக்கி மாணவர்களுக்கு தலை, மார்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. நாங்கள்தான் காவல்துறை என்று வெளிப்படுத்த மாணவர்களை காயப்படுத்துவது தவறானது.

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்

தில்லியில் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்படுகிறது. கண்ணீர்ப்புகைக் குண்டுகள் அவர்கள் மீது வீசப்படுகின்றன. மோடியின் இந்த ஆணவத்தை இளைஞர்கள் நீண்ட காலம் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். பதிலடி மிக மோசமாக இருக்கும்.

நாகா மாணவர்கள் முன்னணி

பிரதமர் மோடி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி ஒடுக்கி இருக்கலாம். ஆனால் தாக்குதலில் காயமடைந்த மாணவன் ஒருவன், ஆயுதமேந்திய போர் வீரனை விட உறுதியாக இருப்பான் என்பதை மோடி இன்னும் புரிந்து கொள்ளவில்லை. இலங்கை, நேபாளத்தில் நடந்த மாணவர் கிளர்ச்சி செய்திகளை மோடி படித்து இருக்க மாட்டார் போலும்.