தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அனைத்துத் தேர்தல்களிலும் முறைகேடு ராகுல் காந்தி குற்றம்சாட்டு!

24 Sept 2026, 9:07 pm
அனைத்துத் தேர்தல்களிலும் முறைகேடு ராகுல் காந்தி குற்றம்சாட்டு!
<p><strong>அனைத்துத் தேர்தல்களிலும் முறைகேடு ராகுல் காந்தி குற்றம்சாட்டு!</strong></p><p>தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை வெளியிட்ட புலனாய்வுக்கட்டுரையைத் தொடர்ந்து,நாட்டின் தேர்தல் கட்டமைப்பு சீர்குலைந்துவிட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>இது தொடர்பாக வியாழனன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில், “அனைத்துத் தேர்தல்களிலும் முறைகேடு செய்யப்பட்டுள்ளதால், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். உலகில் உள்ள எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் இல்லாதவாறு, இந்தியாவில் மட்டும் பாஜக அரசுக்கு எதிராக ஆட்சி எதிர்ப்பு அலை உருவாகாதது எப்படி? என்ற சந்தேகம் எனக்கு மட்டுமின்றி நாட்டு மக்களுக்கும் உள்ளது.நான் ஓர் அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவன். இந்தியாவில் ‘ஆட்சி எதிர்ப்பு அலை’ (Anti-incumbency) என்ற ஒரு அடிப்படைச் சக்தி உள்ளது. அது யாரையும் விட்டுவைப்பதில்லை. இந்திரா காந்தி பங்களாதேஷ் போரில் வெற்றிபெற்றார். ஆனால் அதற்குப் பிறகுஓராண்டு அல்லது இரண்டாண்டுகளுக்குள் கடுமையான ஆட்சி எதிர்ப்பு அலையைச் சந்தித்தார். இதுதான் ஒவ்வொரு தலைவருக்கும் நடக்கும். ஆனால் ஏனோ தெரியவில்லை, நரேந்திர மோடி,அமித் ஷா மற்றும் பாஜக ஆகியோருக்கு மட்டும் இது நடப்பதே இல்லை. வாக்காளர் பட்டியலில் முறைகேடாகப் பெயர்கள் நீக்கப்படுவது, வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான ஐயங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை ஆகியவைதான் ‘ஆட்சி எதிர்ப்பு அலை’ பிரதிபலிக்காமல் போவதற்குக் காரணம்” என ராகுல் காந்தி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.