“ராகுல், அகிலேஷ் ஆகியோரை எங்கு அழைத்துச் செல்கிறார்கள் என்பதை காவல்துறை தெரிவிக்கவில்லை”
21 Jul 2026, 10:10 pm
<p><strong>“ராகுல், அகிலேஷ் ஆகியோரை எங்கு அழைத்துச் செல்கிறார்கள் என்பதை காவல்துறை தெரிவிக்கவில்லை”</strong></p><p>புதுதில்லி, ஜூலை 21 - தில்லி பிரதமர் அலுவலகம் அருகே காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி பெரும்பாலான எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. இந்த போராட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள், எம்.பி.,க்கள் கைது செய்யப்பட்டனர். கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், கேரள முதலமைச்சர் வி.டி.சதீஷன் ஆகியோரும் போராட்டத்தில் பங்கேற்ற நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டதற்கான தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், கைது செய்யப்பட்ட ராகுல், அகிலேஷ் எங்கு அழைத்துச் செல்கிறார்கள் என்பதை காவல்துறை தெரிவிக்கவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”பிரதமர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யபட்ட காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மற்றும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பிற அரசியல் தலைவர்களை தில்லி காவல்துறை எங்கு அழைத்துச் செல்கிறது (எந்த காவல்நிலையத்துக்கு) என்பது குறித்து எந்தத் தகவலும் (இரவு 8 மணி வரை) தெரிவிக்கவில்லை” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.</p>
