கன்சி ராமிற்கு பாரத ரத்னா பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்
15 Mar 2026, 4:11 pm
<p><strong>கன்சி ராமிற்கு பாரத ரத்னா பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்</strong></p>
<p>பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்சி ராமிற்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிர தமர் மோடிக்கு கடிதம் கோரிக்கை விடுத் துள்ளார். ஞாயிறன்று கன்சி ராமின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமருக்கு எழுதி யுள்ள கடிதத்தில்,”கன்சி ராம் அவர்கள் இந்திய அரசியலின் தன்மையையே மாற்றியமைத்தவர். தனது இயக்கங்க ளின் மூலம் தலித் மற்றும் ஏழை மக்களி டையே அரசியல் விழிப்புணர்வை ஏற் படுத்தினார். அவர்களின் வாக்கு, குரல் மற்றும் பிரதிநிதித்துவம் எவ்வளவு முக்கி யமானது என்பதையும், இந்த நாடு அனைவருக்கும் சமமானது என்பதையும் அவர் நினைவூட்டினார். அவருக்கு பாரத ரத்னா விருதை வழங்குவது கவுரவிக்கும் செயல் ஆகும்” என கடிதத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.</p>
