தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள் பீடி சுற்றிய கைகள் செங்கொடி உயர்த்தியபோது... - ஜி.ராமகிருஷ்ணன்

12 Jul 2026, 10:05 pm
களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள் பீடி சுற்றிய கைகள் செங்கொடி உயர்த்தியபோது... - ஜி.ராமகிருஷ்ணன்

களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள் பீடி சுற்றிய கைகள் செங்கொடி உயர்த்தியபோது... - ஜி.ராமகிருஷ்ணன்

‘களப்பணி யில் கம்யூ னிஸ்டுகள்’ தொட ரில் இதுவரை 250க்கும் மேற்பட்ட களப்போராளி களைச் சந்தித்திருக் கிறோம். இப் போது நாம் காண விருப்பது தோழர் எஸ். எச்.ரஹ்மான் பீவி. திருநெல்வேலி நகரத்தின் மேலப் பாளையம் பகுதியில் 1948இல் ஓர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். ஜமுக்காள வியாபாரம் செய்து வந்தவரான தந்தை, இவர் 4 வயதுக் குழந்தையாக இருந்தபோதே இறந்து விட்டார். தந்தையின் தொழிலைத் தாய் தொடர்ந்து நடத்தி குடும்பத்தைப் பாதுகாத்து வந்தார். வறுமையே குடும்ப நிலைமையாக இருந்ததால் இவரால் 5ஆம் வகுப்பிற்கு மேல் படிப்பைத் தொடர முடியவில்லை. 10ஆவது வய தில் பீடி சுற்றும் வேலையில் சேர்ந்தார். கிடைக்கும் ஒருநாள் கூலி 4 ரூபாயைத் தினமும் தாயிடம் கொடுத்து விடுவார். 1920களிலேயே பீடித் தொழில் வந்துவிட்டது, 1930களில் பீடித் தொழி லாளர்களுக்கான சங்கங்கள் உரு வாகிவிட்டன. 1940களில் தொழிலாளர் கோரிக்கைகளுக்கான வலுவான போராட்டங்களும் நடந்தன. நாட்டின் விடுதலைக்குப் பின் 1954இல் காம ராஜர் தலைமையிலான மெட்ராஸ் மாகாண அரசாங்கத்தால் “சென்னை பீடித் தொழில் வளாக தொழிலாளர் (வேலை நிலைமைகள்) சட்டம் – 1954” கொண்டுவரப்பட்டது. 1970இல் வேலூர் வே.கண்ணன் வழிகாட்டுதலுடன் சிஐ டியு தலைமையிலான “நெல்லை மாவட்ட பீடித் தொழிலாளர் சங்கம்” தொடங்கப்பட்டது. சு. பாலவிநாயகம் தலைவராகவும் எம். ராஜாங்கம் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இந்தச் சங்கம் வறுமையில் உழன்ற பீடித் தொழிலாளர்களுக்காகப் பல போராட்டங்களை நடத்தி அவர் களின் கோரிக்கைகளை வென்றெடுத் தது. மேலப்பாளையம் பகுதியில் மற்ற தொழிலாளர்களுடன் சேர்ந்து சங்க த்தில் உறுப்பினரானார் ரஹ்மான் பீவி.

இஸ்லாமியப் பெண்கள் எழுச்சி

1992 வரை பீடி நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு போனஸ் கிடை யாது. போனஸ் கோரி சிஐடியு தலைமை யில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாகச் சென்று ஆர்ப்பா ட்டம் நடத்தப்பட்டது. இஸ்லாமியக் குடும்பங்களைச் சேர்ந்த 500 பெண்கள் அதில் எழுச்சியோடு பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் தொழிலாளர் துறை அதிகாரிகளை வரவழைத்து பீடித் தொழிலாளர்களுக்குச் சட்டப்படியான 8.33% போனஸ் வழங்க ஆணை யிட்டார். அதன் அடிப்படையில் அன்றி லிருந்து இன்று வரை போனஸ் வழங்க ப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வெற்றிகரமான இயக்கத்திற்காக மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்களை முதன்முறை யாகப் போராட்டக் களத்திற்குக் கொண்டு வந்ததில் தோழர் ரஹ்மான் பீவி குறிப்பி டத்தக்க பங்களிப்பைச் செய்தார். பீடித் தொழிலாளர்களுக்கு அப் போது கருணைத்தொகை (கிராஜுட்டி) என்பது கிடையாது. அதற்காக பீடி நிறுவனங்களில் சங்கத்தின் அறைகூவ லை ஏற்றுப் பல போராட்டங்களைத் தொழிலாளர்கள் நடத்தினார்கள். பின்னர் சங்கம் முடிவு செய்த அடிப்ப டையில் ராஜாங்கத்தின் முன்முயற்சி யால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. தொழிலாளர் கோரிக் கைக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க, அதன் அடிப்படையில் கிராஜுட்டி வழங்கப்பட்டு வருகிறது.

நிர்வாகத்தின் பிடிவாதம்

1996ஆம் ஆண்டு பீடித் தொழிலா ளர்களுக்கு ஆயிரம் பீடிக்கு மூன்று ரூபாய் ஊதிய உயர்வு என ஒப்பந்தம் ஏற்பட்டது. மற்ற நிறுவனங்கள் அனைத்தும் அந்த ஊதிய உயர்வை வழங்கிய நிலையில் முருகா ஹோம் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகம் மட்டும் அதை வழங்காமல் 18 மாதங்கள் ஏமற்றி வந்தது. அதை எதிர்த்து மாவட்டம் முழு வதும் 15 நாட்கள் பீடித் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டார்கள். வெற்றிகரமாக நிறைவடைந்த அந்தப் போராட்டம் நெல்லை மாவட்டத்தில் மிகப்பெரிய எழுச்சியை உருவாக்கியது. இந்நிலையில் ரஹ்மான் பீவிக்குப் பல கோணங்களில் அச்சுறுத்தல் களும் சங்கச் செயல்பாட்டிலிருந்து ஒதுங்கியிருக்கு மாறு வற்புறுத்தல்க ளும் வந்தன. எவ்விதக் கெடுபிடிக்கும் அஞ்சாதவராக அவர் சங்கத்தின் செங்கொடியை உயர்த்திப்பிடித்தார். குறிப்பாக இஸ்லாமியக் குடும்பங்களின் பெண் தொழிலாளர்களுக்கு நம்பிக்கை யூட்டிப் போராட்டகளத்தில் இறங்கச் செய்தார். அந்தப்போராட்டத்தின் பலனாக, தமிழக அரசும் தொழிலாளர் துறையும் தலையிட்டன. முருகா ஹோம் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகம் 18 மாதம் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு நிலுவை 3 கோடி ரூபாயை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பீடித் தொழிலாளர்களுக்கு மூன்று தவணை களாக வழங்கியது. அந்தப் போராட்டத்தி லும் ரஹ்மான் பீவி தலையாய பங்காற்றினார். முருகா ஹோம் இண்டஸ்ட்ரீஸ் நிறு வனத்தில் நிறையப் பெண்கள் பீடி சுற்றினாலும் ஆண்களின் பெயரில் தான் கணக்குக் கையேடு (பாஸ் புக்) இருந்தது. இதனால் உழைப்பின் மூல மாகப் பெறக்கூடிய பல்வேறு பணப் பயன் களை வீட்டில் உள்ள ஆண்கள் பெற்றுக் கொண்டு போய்விடுவார்கள். இது பெண் களிடையே பெரும் குமுறலை ஏற்படுத்தி யது. இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்த சங்கம், பீடி சுற்றுகிற பெண்கள் பெயரில் பாஸ்புக் வழங்க வலியுறுத்தி வலுவான போராட்டத்தை நடத்தியது. பெண்களைத் திரட்டுவதில் முன்னணிப் பாத்திரம் வகித்தார் ரஹ்மான் பீவி. கோரிக்கையை நிர்வாகம் ஏற்க மறுத்த நிலையில் காப்பீட்டுத்துறை ஊழியர் தலைவர்களில் ஒருவரான இசக்கிமுத்து அளித்த ஆலோச னைப் படி சங்கத்தின் பொதுச்செய லாளர் ராஜாங்கம் பெண் தொழிலாளர் களுக்கு பாஸ் புக் உள்ளிட்ட சட்டப்படி யான ஏற்பாடுகளை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்திற்கு ஒரு கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தையே உச்சநீதிமன்றம் ஒரு வழக்காக எடுத்துக் கொண்டு, இது குறித்து விசாரிக்க ஒரு ஆணையத்தை அமைத்தது. மதுரை சோக்கோ அறக்கட்டளைத் தலைவர் திரு. மகபூப் பாட்சா அதன் ஆணையராக நியமிக்கப்பட்டார். அவர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் பீடித் தொழிலில் பணிபுரியும் பெண் தொழிலாளர் களுக்கும் பாஸ்புக் வழங்க வேண்டும் என்பதோடு மத்திய பீடித் தொழிலாளர் கள் நலச்சட்டம்-1976 இல் உள்ள அனைத்து உரிமைகளையும் செயல் படுத்த உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. இத்தீர்ப்பின் அடிப்படையில் வருங்கால வைப்பு நிதி மண்டல அலு வலகம் நெல்லையில் திறக்கப்பட்டது. பீடித் தொழிலாளர் சேமநல ஆணையர் அலுவலகம் சென்னையிலிருந்து நெல்லைக்கு மாற்றப்பட்டது. நெல்லை மாவட்டத்திற்கு மகளிர் தொழிலாளர் ஆய்வாளர் நியமிக்கப்பட்டார். மாவட்டம் முழுவதும் 18 வெளிநோயாளி கள் பிரிவுகள் ஆரம்ப மருத்துவமனை களில் திறக்கப்பட வேண்டும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு அமலாக்கப் பட்டது. இந்தப்போராட்டத்தில் ரஹ்மான் பீவியின் பங்களிப்பைத் தோழர்கள் நினைவுகூர்கிறார்கள்.

மேடைப் பேச்சாளர்

சங்கத்தில் ஆர்வமாகப் பணியாற்றி வந்த ரஹ்மான் பீவி 1988இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பி னரானார். அடுத்த சில ஆண்டுகளில் நடைபெற்ற பீடித் தொழிலாளர் சங்க மாவட்ட மாநாட்டில் சங்கத்தின் துணைத் தலைவராகத் தேர்வானார். தோழர் ரஹ்மான் பீவிக்கு நூல் வாசிப்புக்கு இயலவில்லை. ஆனால் சங்கமும் கட்சியும் நடத்தும் வகுப்புகளில் கலந்துகொண்டு கூர்ந்து கவனிப்பார். சிஐடியு பொதுக்கூட்டங்களில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது மேடைகளில் உரத்த குரலெடுத்து, மக்களின் எளிய மொழிநடையில் பேசக்கூடியவர். அவரது மேடைப்பேச்சு மேலப்பாளையத்தில் இஸ்லாமிய ஆண்கள், பெண்கள் இரு தரப்பினரி டையேயும் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது. ஒரு முஸ்லிம் பெண் கம்யூனிஸ்ட் கட்சி மேடையில் ஏறிப் பேசுவது என்பது அந்த நாட்களில் யாரும் எதிர்பாராதது. இவரை மேலப்பாளையத்தில் ஒரு கம்யூனிஸ்ட் தலைவராகவே பார்த்தனர். இப்போதும் தோழர் ரஹ்மான் பீவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும், சிஐடியு தொழிற் சங்கத்தோடும் உறுதியாக நிற்கிறார். மேலும் அவரது குடும்பமே கட்சி குடும்ப மாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்றுபட்ட திருநெல்வேலி, தென் காசி மாவட்டத்தில் உள்ள 70க்கும் மேற் பட்ட பீடி கம்பெனிகளில் சங்கம் உருவா னது. இத்தொழில் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள், நகரங்களில் குடிசைத் தொழிலாக இயங்கி வருகிறது. பல்லா யிரக்கணக்கான தொழிலாளர்கள் சங்கத்தின் அங்கமாக இருந்தனர். இவர்கள் நடத்திய போராட்டத்தின் வீச்சாக ஆலங்குளம், கீழப்பாவூர், பாப்பாக்குடி ஆகிய ஒன்றியங்களில் விவ சாயிகள் சங்கமும் கட்சிக் கிளைகளும் உருவாக்கப்பட்டன. தொழிலாளர்களின் பிள்ளைகளைக் கொண்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உருவா க்கப்பட்டது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க கிளைகளும் உருவாக்கப்பட்டன.

கட்சி மாற மறுப்பு

கட்சி உறுப்பினராக, பீடித் தொழிலா ளர் சங்க நிர்வாகியாகத் துடிப்போடு செய ல்பட்ட ரஹ்மான் பீவியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் அணுகி, அக்கட்சியில் சேர வலியுறுத்தி னர். அவர்களிடம் இவர், “நான் மத நம்பிக்கை உடையவள்தான். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பல ஆண்டுகள் உறுப்பினராகச் செயல் பட்டு வருகிறேன். மதச்சார்பின்மைக்கும், சிறுபான்மை மக்களைப் பாதுகாப்பத ற்கும் நான் தொடர்ந்து பாடுபடுவேன். உங்கள் கட்சியில் சேர விரும்பவில்லை” என்று கூறிவிட்டார். 1

992ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று அயோத்தியில் பாபர் மசூதியை சங் பரிவாரத்தினர் இடித்ததையொட்டி பல மாநிலங்களில் பல பகுதிகளில் மதக்கல வரம் ஏற்பட்டது. பாபர் மசூதி இடிக்கப் பட்டதைக் கண்டித்து மேலப்பாளை யத்தில் இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப் பாட்டம் நடத்தினார்கள். இதையொட்டி மதக்கலவரம் ஏற்பட்டபோது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு இஸ்லாமியர்கள் கொல்லப்பட்ட னர். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் மேலப்பாளையத்தி ற்குச் சென்று அமைதியை உருவாக்கு வதற்காக அனைத்துக் கட்சி சமாதானக் கூட்டத்தை நடத்தினார். இக்கூட்டத்தில் சிபிஐ(எம்) மாவட்டச் செயலாளர் தோழர் வீ. பழனி, கட்சியின் பகுதி செயலாளர் மறைந்த கிருஷ்ணன் உள்பட பல தோழர்கள் கலந்துகொண்டனர். தோழர் கிருஷ்ணன் சிறுபான்மையினரைப் பாதுகாப்பதிலும் உறுதியாக நின்றவர். சுமார் 800 பேர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் தோழர் ரஹ்மான் பீவி மாவட்ட ஆட்சியரைப் பார்த்துக் கேள்வி கேட்டார். “ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு யார் அனுமதி கொடுத்தது? அனுமதி இல்லா மல் துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை யினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும், “என் கேள்விக்கு மாவட்ட ஆட்சி யர் பதில் சொல்ல வேண்டும்” எனவும் ரஹ்மான் பீவி உரத்த குரலில் பேசி னார். அந்த இடத்திலேயே இரண்டு காவல் துறை சார்ந்தவர்களைத் தற்காலிக வேலைநீக்கம் செய்வதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.

இவர் வசிக்கும் மேலப்பாளையம் பகுதியில் குடிநீர் கிடைக்கவில்லை என்றாலோ, சாக்கடை தூய்மைப்படுத்தப் படவில்லை என்றாலோ மக்கள் இவ ரிடம் முறையிடுவார்கள். மக்களைத் திரட்டி தோழர் ரஹ்மான் பீவி வீதிக்கு வந்து விடுவார். தொழிற்சங்கப் பணியோடு தான் வசிக்கும் பகுதியில் மக்கள் நலனுக்கான போராட்டத்தையும் தொடர்ந்து நடத்திய வர் இவர். மக்கள் குடியிருக்கும் பகுதி யில் அமைக்கப்பட்டிருந்த சாராயக் கடை யை அகற்றுவதற்குப் பாடுபட்டவர் இவர். ரேஷன் கடை அரிசி சமூக விரோதி களால் கடத்தப்பட்டபோது அதைத் தடுத்து நிறுத்திப் பறிமுதல் செய்ய வைத்தார். ரஹ்மான் பீவியின் 18ஆவது வயதில் அப்துல் ரஹ்மான் என்பவருடன் திரு மணம் நடைபெற்றது. இவருடைய கண வர் கறவை மாடுகள் வைத்துப் பால் பண்ணை நடத்திப் பால் வியாபாரம் செய்து வந்தார். 2003ஆம் ஆண்டு அப் துல் ரஹ்மான் இறந்துவிட்டார். பீடி சுற்றும் வேலையில் கிடைக்கும் வருமா னத்தை வைத்துத் தனது குடும்பத்தை ரஹ்மான் பீவி நடத்தி வந்தார். இவர் களுக்கு ஒரு மகன், ஒரு மகள். இரண்டு பேரன்கள், இரண்டு பேத்திகள். பேரன் கள் இருவரும் வெளிநாட்டில் உள்ளனர்.

தற்போது 78 வயதாகும் தோழர் ரஹ்மான் பீவி கட்சி உறுப்பினராகவும், பீடிச் சங்க உறுப்பினராகவும் செயல் பட்டு வருகிறார். பீடித்தொழிலாளர்களுக் காக மட்டுமல்ல, தான் வசிக்கும் மேலப்பாளையம் பகுதி மக்களின் அடிப்படை கோரிக்கைகளுக்கான போராட்டத்தையும் முன்னின்று நடத்தி யவர். சிறுபான்மை மக்கள் பாதுகாப்பி ற்காகவும் தொடர்ந்து குரலெழுப்பி வருபவர். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு முன்னுதாரணத் தோழராக ரஹ்மான் பீவி ஆற்றி வரும் களப்பணி பாராட்டுக்குரியது, பின்பற்றத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.