தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விவசாயிகள் சங்கத்தின் சமத்துவ பொங்கல் விழா ஆர்.சச்சிதானந்தம் எம்.பி.,பங்கேற்பு

17 Jan 2026, 2:42 pm
விவசாயிகள் சங்கத்தின் சமத்துவ பொங்கல் விழா ஆர்.சச்சிதானந்தம் எம்.பி.,பங்கேற்பு
<p><strong>விவசாயிகள் சங்கத்தின் சமத்துவ பொங்கல் விழா ஆர்.சச்சிதானந்தம் எம்.பி.,பங்கேற்பு</strong></p> <p>பழனி, ஜன.17- பழனி கொடைக்கானல் ரோடு அண்ணா நகரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கொடி யேற்று நிகழ்ச்சி மற்றும் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்நிழ்ச்சியில் திண்டுக்கல் நாடாளு மன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் கொடி யேற்றி வைத்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து ஊர் மக்களுடன் சேர்ந்து சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினார். ஊர் மக்கள் ,அப்பகுதி விவசாயிகளிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் &nbsp;கொண்டதுடன் மலைப்பகுதியில் அமைந் துள்ள தெரு வீதிகள் மிகவும் ஆபத்தான நிலை யில் தொங்கி கொண்டிருப்பதை பார்வை யிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க ஆவன செய்வதாக கூறினார். பழனி ஒன்றியம் பொந்துக்குழியில் விவ சாயிகள் கோரிக்கை பேரவையில் பங்கேற்று பேசினார். உபரி நில ஆக்கிரமிப்பை அகற்றக் &nbsp;கோருதல், செல்போன் டவர் உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட அவர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அப்பகுதி &nbsp;விவசாயிகளிடம் கூறினார். இந்நிகழ்வுகளில் சங்க மாவட்டச் செயலா ளர் எம்.ராமசாமி,காபி சங்க மாநிலச் செயலா ளர் எம்.செல்லையா, பால் உற்பத்தியாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கமலக் கண்ணன், சிபிஎம் பழனி ஒன்றிய செய லாளர் ஆர்.ஈஸ்வரன் ,மாவட்ட குழு உறுப்பி னர் &nbsp;என்.பாண்டின்.ஆர் பொன்னுசாமி உட்பட &nbsp;ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.