தமிழ்நாடு அணிக்கு ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., வாழ்த்து
2 Dec 2025, 4:11 pm
<p><strong>தமிழ்நாடு அணிக்கு ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., வாழ்த்து</strong></p>
<p>23 வயதுக்குட்பட்டோருக் கான மாநில ‘ஏ’ கோப் பைக்கான (ஒருநாள்) கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் உத்த ரப்பிரதேசம் - தமிழ்நாடு அணி கள் மோதின. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வான்கடே மைதா னத்தில் திங்களன்று இந்த ஆட்டம் நடை பெற்றது. மிக பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 56 ரன்கள் வித்தி யாசத்தில் தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம்வென்றது. இந்நிலையில், தேசிய அளவிலான கோப்பையை கைப்பற்றிய தமிழ்நாடு அணி வாழ்த்து மழையில் நனைந்து வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் தனது வாழ்த்துக் குறிப்பில், “இந்திய கிரிக் கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்காக நடத்தும் மாநிலங்களுக்கு இடையே யான ஒருநாள் போட்டிகளில், வர லாற்றில் முதல் முறையாக தமிழ்நாடு கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இறுதிப்போட்டியில் உத்தரப்பிரதேச அணியை வீழ்த்தி, தமிழ்நாடு அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றியவர், திண்டுக்கல் மாவட்டம் நெட்டியப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரர் பூபதி வைஷ்ண குமார். தமிழ்நாடு அணியின் கேப்டனாக விளங்கிய அவர், மொத்தம் 9 போட்டி களில் 489 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு பெரும் பங்களிப்பு செய்துள் ளார். தமிழ்நாடு அணியினருக்கும், பூபதி வைஷ்ண குமாருக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.</p>
