கலை ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற ஓவியக்கண்காட்சி
1 Jun 2026, 11:55 pm
<p><strong>கலை ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற ஓவியக்கண்காட்சி</strong></p><p>சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள அஷ்விதாஸ் கலைக் கூடத்தில் புகழ்பெற்ற நவீன ஓவியரான ஆர். வரதராஜனின் உணர்வுகளின் கொள்கலன் கள்’ (Vessels of Vulnera bility) என்ற ஓவியக் கண் காட்சி தற்போது நடைபெற்று வருகிறது. மெட்ராஸ் ஆர்ட் மூவ்மென்ட் இயக்கத்தின் முக்கியக் கலைஞர்களில் ஒருவரான வரதராஜனின் படைப்புகளைக் கொண்ட இந்தக் கண்காட்சி, கலை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள் ளது. 1935-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பிறந்த ஆர். வரதராஜன், சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியில் கே.சி.எஸ். பணிக்க ரின் வழிகாட்டலில் கலை பயின்றவர். நவீன இந்தியக் கலையுலகில் தமக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்த இவர், தனது ஓவியங்களில் மனித உணர்வு கள், மனப்போராட்டங்கள் மற்றும் வாழ்க்கையின் மென்மையான பக்கங்க ளைச் சுருக்கமான வடிவில் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார். நிஜத்தை அப்படியே வரைவதைத் தவிர்த்து, ஞாபக ங்களையும் மனித மனதின் ஆழமான உணர்வுகளையும் ஓவியங்க ளாக வடித்தது இவரது பாணி யாகும். ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த ஆர். வரதரா ஜனின் கலைப் பயணம், பாரிஸ் பியன்னாலே மற்றும் சர்வதேச கிராஃபிக் கலைக் கண்காட்சி போன்ற முக்கிய மான தேசிய மற்றும் சர்வ தேசக் கண்காட்சிகளில் பங்கேற்றதன் மூலம் சிறந்து விளங்கியது. இவரது படைப்புகள் தேசிய நவீன கலைக்கூடம் லலித் கலா அகாடமி மற்றும் தேசிய கலைக் கூடம் போன்ற மதிப்புமிக்க நிறுவனங் களின் சேகரிப்புகளில் இன்றும் பாதுகாக் கப்பட்டு வருகின்றன. இந்தக் கண்காட்சி ஜூன் மாதம் இறுதி வரை, அதாவது ஜூன் 30 வரை அஷ்விதாஸ் கலைக்கூடத்தில் பொதுமக்கள் பார்வைக் காகத் திறந்திருக்கும். மனித வாழ்வின் ஆழமான பரிமாணங்களைச் சித்திரிக் கின்ற வரதராஜனின் ஓவியங்களை நேரில் சென்று ரசிக்க இது ஒரு சிறந்த வாய்ப்பா கும்.</p>
