சேகுவேரா பிறந்த நாள் விழா மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. வழங்கினார்
25 Jun 2026, 11:22 pm
<p><strong>சேகுவேரா பிறந்த நாள் விழா மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. வழங்கினார்</strong></p><p>திண்டுக்கல், ஜூன் 25- சேகுவேராவின் 98-வது பிறந்த நாள் விழாவை யொட்டி, திண்டுக்கல்லில் பள்ளி மாணவ, மாணவியர் களுக்கு கல்வி உபகரணங் கள் வழங்கும் விழா நடை பெற்றது. இதில் திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் மாணவர் களுக்கு கல்வி உபகரணங் களை வழங்கினார். திண்டுக்கல் பிச்சை முத்து படிப்பகத்தில் புதன் கிழமை இரவு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சிபிஎம் கிளைச் செயலாளர் அருண் டிக்னேஷ் தலைமை வகித்தார். டி.வினோதினி வரவேற்றார். நிகழ்ச்சியில் ஆர்.சச்சிதா னந்தம் எம்.பி. சிறப்புரை யாற்றியதுடன், மாணவர்க ளுக்கு கல்வி உபகரணங் களை வழங்கினார். மேலும், சிபிஎம் மாவட் டச் செயலாளர் கே.பிரபா கரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.வசந்தாமணி, மாவட்டக்குழு உறுப்பினர் கே.எஸ்.கணேசன், மாநகரக் குழு உறுப்பினர்கள் என்.கிருஷ்ணன் மற்றும் டியாகோ எமர்சன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினர்.</p>
