முந்தய பக்கம்

சேலம் வடக்கில் ரா.ராஜேந்திரன் வாக்கு சேகரிப்பு

11 Apr 2026, 5:30 am
சேலம் வடக்கில் ரா.ராஜேந்திரன் வாக்கு சேகரிப்பு

சேலம் வடக்கில் ரா.ராஜேந்திரன் வாக்கு சேகரிப்பு

சேலம், ஏப். 10 - சேலம் வடக்குத் தொகுதி திமுக வேட்பாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ரா.ராஜேந்திரன், காந்தி ஸ்டேடியம் மற்றும் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களிடம் வெள்ளியன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது மக்களிடையே அவர் பேசுகையில், தமிழக அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. பொதுவாக இளைஞர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் அஸ்தம்பட்டி முதல் மாடர்ன் தியேட்டர் வரை புதிதாக 8 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைப்பயிற்சி தளம் அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் தரமான மருத்துவ வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு உறுதி செய்துள்ளது. மக்களுக்குத் தேவையான திட்டங்களை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்த, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து திமுகவை மீண்டும் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

Share
FacebookXWhatsAppTelegram