ஆர்.என். ரவி வருகைக்கு எதிர்ப்பு : காமராசர் பல்கலை.யை எஸ்எப்ஐ முற்றுகை!
12 Dec 2025, 2:40 pm
<p><strong>ஆர்.என். ரவி வருகைக்கு எதிர்ப்பு : காமராசர் பல்கலை.யை எஸ்எப்ஐ முற்றுகை!</strong></p>
<p>மதுரை, டிச. 12 - மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் ரவிக்கு எதி ராக இந்திய மாணவர் சங்கத்தினர், பல்கலைக் கழக வாயிலை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். தமிழக மாணவர்களின் கல்வி நலனுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என். ரவி மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாண வர் சங்கத்தினர் (எஸ்எப்ஐ) போராட்டம் அறிவித் திருந்தனர். இதனால், மாணவர் சங்கத்தின் மாநகர் மாவட்டத் தலைவர் ஜெ. டீலன் ஜெஸ்டின், மாவட்ட செயலாளர் மற்றும் பல்கலைக்கழக கிளை பொறுப்பாளர் டேவிட் ராஜதுரை, பல்கலைக்கழக கிளை உறுப்பினர்கள் நேதாஜி, கண்ணா ஆகி யோரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் போலீசார் கைது செய்தனர். எனினும், இந்திய மாணவர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை யன்று பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டனர். மாணவர் சங்க மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் சுந்தர், புறநகர் மாவட்டச் செயலாளர் சுதர்சன், துணைத் தலைவர் அகிலா, துணைச் செயலாளர் பிரகலாதன் மற்றும் ரேகன், பாரதி, சேதுபதி, குரு கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவர்களின் முற்றுகைப் போராட்டம் காரணமாக, ஆளுநர் ஆர்.என். ரவி. பிரதான வழியில் வராமல், மாற்று வழியில் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினார்.</p>
