முந்தய பக்கம்

ஆர். முரளிதரன் படத்திறப்பு

6 May 2026, 12:56 am
ஆர். முரளிதரன் படத்திறப்பு
<p><strong>ஆர். முரளிதரன் படத்திறப்பு</strong></p><p>கோவை, மே 5- அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கத்தின் நிர்வாகியும், பொதுவு டைமை சிந்தனையாளரு மான அன்மையில் மறைந்த ஆர். முரளிதரன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு செவ்வாயன்று நடைபெற்றது. கோவை, ஆர்.எஸ்.புரம், காமராஜபுரம் பகுதியில் உள்ள பேரூர் அருந்ததியர் சமூக மடத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு, சிபிஎம் முன்னாள் மாமன்ற உறுப்பினர் என்.முருகேசன் தலைமை ஏற்றார். கமலக்கண்ணன் வரவேற் றார். இதில், தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழி யர் சங்க பொதுச் செயலாளர் சுரேஷ், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கோவை பகுதி தலைவர் பி.வி.குமார், செயலாளர் துள சிதரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் த.நாகராஜ், வழக் கறிஞர் மதிவாணன், விசிக சார்பில் சீலா நாக ராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர். முன்னதாக, ஆர்.முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் நூலை மின் ஊழி யர் மத்திய அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி வெளியிட்டார். இதனை நிகழ்வில் பங்கேற்ற தலைவர்கள் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் திரளா னோர் பங்கேற்றனர். முடிவில் மார்க்சிஸ்ட் கட்சியின் காமராஜபுரம் கிளை செயலாளர் டி. இளையராஜா நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram