ஆர்.கருணாநிதி - மஞ்சுளாதேவி இல்லத் திருமணம்
29 Jun 2026, 11:34 pm
<p><strong>ஆர்.கருணாநிதி - மஞ்சுளாதேவி இல்லத் திருமணம்</strong></p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.கருணாநிதி - மறைந்த மஞ்சுளாதேவி மகன் க.அச்சுதன், இரா.சிவலிங்கம் - சி.அன்னபூரணி மகள் சி.அபிதா திருமணம் சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் திருவொற்றியூரில் ஞாயிறன்று (ஜூன் 28) நடைபெற்றது. அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், மூத்த தோழர் ப.செல்வசிங், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தரராஜன், தொழிலதிபர் ஜி.வரதராஜன், மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு, மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியலட்சுமி, பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், திமுக மேற்கு பகுதிச் செயலாளர் வை.மா.அருள்தாசன், பொது தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ஆர்.முத்துசாமி, வி.பி.நகர் செயலாளர் என்.ராமமூர்த்தி, எம்.ராமன்,சிஐடியு மாவட்டச் செயலாளர் வி.குப்புசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.</p>
