பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதியில் ஆர். செல்லசுவாமி நன்றி அறிவிப்பு
21 May 2026, 9:11 pm

பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதியில் ஆர். செல்லசுவாமி நன்றி அறிவிப்பு

நாகர்கோவில், மே 21 - திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர். செல்லசுவாமி வியாழனன்று (மே 21) வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

இந்த நன்றியறிவிப்பு சுற்றுப் பயணத்தை, திமுக மாவட்டத் துணைச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான புஷ்பலீலா ஆல்பன், திருவட்டாறு பேருந்து நிலையத்தில் துவக்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து, பாரதப்பள்ளி, சாரூர், குருவிக்காடு, திருவரம்பு, கொல்வேல் புளியிறங்கி, அணைக்கரை, மாத்தூர், ஆனையடி, குட்டக்குழி, செவரக்கோடு, ஏற்றக்கோடு, ஆற்றூர், கழுவன் திட்டை, தோட்ட வாரம், மூவாற்று முகம், தேமானூர், முள்ளுவிளை, கல்லுப்பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து ஆர். செல்லசுவாமி பேசினார்.

சுற்றுப்பயணத்தில், ஆற்றூர் பேரூராட்சித் தலைவர் பெனிலா ரமேஷ், காங்கிரஸ் திருவட்டாறு நகர பொறுப்பாளர் மெர்ஜின் சிங், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம். அண்ணாதுரை, ஆர். ரவி, கே. தங்க மோகனன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர். வில்சன், சகாய ஆன்டனி, போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் சங்க தலைவர் சுந்தர்ராஜ் மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்லசுவாமிக்கு சால்வைகள் அணிவித்து பல்வேறு இடங்களில் வரவேற்பு அளித்த பொதுமக்கள், அவரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

பெருவாரியாக வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்லசுவாமி, தனியார் வனப் பாதுகாப்புச் சட்டம், தொழில் நுட்பப் பூங்கா போன்ற கோரிக்கைகளில் அரசை வலியுறுத்தி தீர்வுகாணவும் சுற்றுலா மேம்பாடு மூலம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் முயற்சிகளை மேற்கொள்வேன் என உறுதியளித்தார்.