தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அபார வெற்றி பெறச் செய்த பத்மநாபபுரம் தொகுதி மக்களுக்கு ஆர்.செல்லசுவாமி நன்றி தெரிவிப்பு

5 May 2026, 11:00 pm
அபார வெற்றி பெறச் செய்த பத்மநாபபுரம் தொகுதி மக்களுக்கு ஆர்.செல்லசுவாமி நன்றி தெரிவிப்பு
<p><strong>அபார வெற்றி பெறச் செய்த பத்மநாபபுரம் தொகுதி மக்களுக்கு ஆர்.செல்லசுவாமி நன்றி தெரிவிப்பு</strong></p><p>நாகர்கோவில், மே 5- சட்டமன்றத் தேர்தலில் அபார வெற்றிபெறச் செய்த பத்மநாபபுரம் தொகுதி மக்க ளுக்கும் தேர்தல் பணியாற் றிய கூட்டணி கட்சி நிர்வாகிக ளுக்கும் ஆர்.செல்லசுவாமி நன்றியை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் மு. க .ஸ்டாலின் தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி யின் சிபிஎம் வேட்பாளராக பத்மநாபபுரம் தொகுதியில் நான் போட்டியிட்டேன். அதில் பெருவாரியான வாக்குகளை எனக்கு அளித்த பத்மநாதபுரம் சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெரு மக்களுக்கும், கன்னியா குமரி மாவட்டத்திற்குட்பட்ட நாகர்கோவில்,குளச்சல் , கிள்ளியூர், விளவங்கோடு, குளச்சல் சட்டமன்ற தொகு தியில் போட்டியிட்ட மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்க ளை வெற்றி பெற செய்த, தேர்தல் பணியில் அர்ப்ப ணிப்புடன் செயல்பட்ட கூட்டணி கட்சி நிர்வாகிக ளுக்கும், சிபிஎம் தொண்டர்க ளுக்கும் என் இதயங் கனிந்த நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறேன். உங்கள் உழைப்பு மற்றும் ஒன்றுபட்ட செயல்பாடு மூலம் இந்த தேர்தல் பணி யானது சிறப்பாக நடை பெற்றது. இதே ஒற்றுமையுடன் எதிர்கால பணிகளிலும் தொடர்ந்து செயல்பட்டு, மக்கள் நலனுக்காக நாம் மேலும் பல சாதனைகள் படைப்போம் என்ற நம்பிக் கையுடன் பயணிப்போம். தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கும் எனக்காக பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பணி யாற்றிய மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, வட்ட, கிளை நிர்வா கிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், பூத் ஏஜென்ட் கள் , கூட்டணி கட்சி நிர்வா கிகள், வாக்களித்த அனை த்து வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.